கண்டனம்

அண்ணனும், தம்பியும் பேசிக் கொள்கிறார்கள்..

தம்பி:- அண்ணே! எதுக்கெடுத்தாலும் கண்டனம் தெரிவிக்கிறார்களே..
கண்டனம் என்றால் என்னங்கண்ணே?..

அண்ணன்:- ஓ அதுவா தம்பி? கண்டனம் தெரிவிப்பது என்றால் வெறியை வெளிப்படுத்துவது..
அதாவது தன்னிடம் உள்ள திறமையின்மை மற்றும் அழுக்கை வெளிக்காட்டாமல்,
தானொரு யோக்கியனென்று காட்டுவதற்கு உரைக்கும் வாயுரை...

தம்பி: - புரியுறமாதிரி சொல்லுங்கண்ணே..

அண்ணன்:- சொல்கிறேன் தம்பி. தவறில்லாததை தவறென்று உரைப்பான்.
தவறை சரியென்று வீரவசனம் பேசுவான்..
சாதி, மதம் சார்பில்லை என்பான். சட்டசபையில் அந்த சாதிக்கு இவ்வளவு இட ஒதுக்கீடு என்று ஒதுக்குவான். சொல்லொன்று.
செயலோ வேறு..
இப்போ புரியுதா??..

தம்பி:- புரியுதுங்கண்ணே! அதாவது சகுனிவேலை செய்வது...

அண்ணன்:- ஆமாம் தம்பி. இது தான் அரசியல் இராஜதந்திரம்....

தம்பி:- அண்ணே அரசியலைப் பற்றி புட்டு புட்டு வைக்கிறீர்களே.
உங்களுக்கு அரசியலுக்கு வருகிற ஐடியா இருக்கா??

அண்ணன்:- ( பயபுள்ள நல்லா பேசிக் கொண்டே இருக்கும் போது நம்மைக் கலாய்ப்பதே வேலையாக வைத்துள்ளது.. ) இல்ல...


Close (X)

0 (0)
  

சிறந்த நகைச்சுவைகள்

புதிய படைப்புகள்

மேலே