மிதி நதி சதி

மிதி.., நதி..., சதி...,
☺☺☺☺☺☺☺☺
என்னங்க பாட்டிம்மா

மிதிங்கறங்கீங்க. யார எத

மிதிக்கச் சொல்லறீங்க. நதிங்கறீங்க.

நம்மஊருக்குப் பக்கத்திலதான்

காவிரி

ஆறு ஓடுது. அதில இப்ப ஒரு

சொட்டு தண்ணி இல்ல. மணல்

இருந்துச்சு. அதையும் நாசமாப்

போறனுவக திருட்டுத்தனமா

திருடி வித்து கோடீஸ்வரங்க


ஆகிட்டங்க. 'சதி' -ன்னு

சொன்னீங்க. அரசியல்ல அதிகாரத்தக் கைப்பற்றவவும் தொழில் போட்டில ஒரு
தொழிற்சாலைய இழுத்து மூடவும் ஒறவுங்காரங்க குடும்பச் சொத்தக்

கைப்பற்றவுந்தான் சதி வேல

பண்ணுவாங்க. நீங்க எதுக்குப்

பாட்டிம்மா அந்த

மூணு வார்த்தைங்களச்

சொன்னீங்க?
☺☺☺☺☺☺
அடி போடி பொன்னி. நா எம் பேரப்

பிள்ளைங்களக் கூப்படறண்டி. எம்

மவன் மாறன் வடக்க பீக்காருல

(பீகார்) இருந்து குடும்பத்தோட

வந்திருக்கறான். அவம்

பிள்ளைங்களத்தாண்டி நாங்

கூப்பிட்டன்.
☺☺☺☺☺☺☺
அதென்ன மிதி, நதி, சதி -ன்னு

பிள்ளைங்களுக்கு மாமனும்

அத்தையும் பேரு வச்சிருக்காங்க?

☺☺☺☺☺☺☺☺☺

அதென்னமோ எனக்கு என்னடி

தெரியும்?
☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊Mithi = truthful ( Adjective) Indian feminine name.
----------
Nathi (Adjective) = modest, respectful (Indian, African & Egyptian unisex name.
--------
Sathi = parter (Indian masculine name)
☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺☺
நம் தாய்த்திரு நாட்டில் இரண்டு செம்மொழிகள் உள்ளன. அவை வடமொழி எனப்படும் சமஸ்கிருமும் தமிழும் தான். இந்தியாவில் பெரும்பாலான மக்களால் பேசப்படும் ஒரே செம்மொழி தமிழ் மட்டுமே. சமஸ்கிருதம் சடங்குகளில் மட்டுமே அதிகமாகப் பயன்படுத்தும் மொழியாக உள்ளது. விக்கிப்பீடியா தகவலின்படி கர்நாடகாவில் உள்ள சிற்றூர்களில் வாழும் சுமார் 5,000 பேருக்கு மட்டுமே சமஸ்கிருதம் தாய் மொழியாக உள்ளது.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
நகைக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

பிறமொழிப் பெயர் அறிவோம்
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

எழுதியவர் : மலர் (13-Jan-17, 11:28 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 136

சிறந்த நகைச்சுவைகள்

மேலே