ஐனகணமன _ ஓர் பார்வை

#ஜனகணமன

நெடு நாட்களுக்கு பிறகு நல்லோர் நூல் படித்த திருப்தி...

இந்திய தேசத்தின் சுதந்திரம் பெற்ற காலத்தில் எத்தகைய ஒரு நல்லரசியலை கடைபிடித்தார்கள் என்பதர்க்கு இந்த புத்தகமும் ஓர் சாட்சி.

அத்தகைய ஒரு அரசியல் மீண்டும் இங்கே பிறந்தால் இன்னும் ஒரு அரை நூற்றாண்டு காலம் என் தேசம் வளர்சியும் செழுமையும்
அடையும் என்பதில் ஐயம் இல்லை.

சாகும் தருவாயில் கூட சாணக்யதனம் காட்டிய காந்திக்கும் ஜின்னாவுக்கும் என்
"சலாம் ".

அத்தருணங்களை ஆசிரியர் விவரிக்கும் போது என்னை அறியாமல் சிரித்து விட்டேன்.

"கோட்சே" வை பிரிவினை வாதத்தால் வந்த விளைவுகளால் பல இந்தியர்களின் மொத்த உருவமாக காண முடியாது.

அகிம்சை அணைத்து காலத்திலும் அணைத்து விஸயத்திலும் ஒத்து வர முடியுமா
என்பதை காந்தி உணர மறந்துவிட்டார்..

அவர் இறப்பிற்க்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வரை அமெரிக்காவின் அனு ஆயுத சோதனை யை கைவிடும் படி கோரினார்.

ஒருவேளை அவர் உயிரோடு இருந்திருந்தால் இந்தியாவின் அனு ஆயுத சோதனை யை நடத்த விட்டுருப்பாரா..?

உலக அரசியல் சூழலில் நாம் நம் ராணுவத்தை பலப்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறிவோம்.

ஒருவேளை காந்தி உயிரோடு இருந்திருந்தால் அவரின்

பிடிவாத குணம்..

அகிம்சை தத்துவம்..

இவற்றின் பின்னால் தான் நாடு சென்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.

இதுவே காந்தியின் பின்னால் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு சிறை சென்ற கோட்சே பிறகு காந்தியை கொள்ள ஆயுதம் ஏந்த நிற்பந்தித்தது.

பிரிட்டீஸார் அதிகாரிக்கு சலாம் போட்டு தன் வேலையை சரியாக செய்த காவல் துறையினர்.,சுதந்திர இந்தியாவில் தன் கடமையை செய்ய தவறியது வேதனை குறிய விடயம்.


எழுத்தாளர் மாலன் அவர்களுக்கு ராயல் சல்யூட்...!

எழுதியவர் : மோகன் சிவா (28-Jan-17, 1:36 pm)
சேர்த்தது : மோகன் சிவா
பார்வை : 161

மேலே