அரசியல் 2017

உழைக்கும் வர்க்கத்தின் ஜீவாதார உரிமை
உள்வாங்கி ஒரு வாக்குரிமை..
குடியரசின் கோட்பாடு மக்களாட்சி
ஓட்டளித்து விட்டு ஐந்து வருடம் வரை
நடக்கும் கூத்து கண்றாவிகளை கண்ணுறும்

எங்கள் இந்தியா உலகப்பெரும் ஜனநாயகம்.
இங்கும் ஏனோ குதிரைப்பேரம்,
தனி ஒருவன் தன்னலம் பாராது
நாட்டுக்கேதேனும் நல்லது செய்யவே
அமையப்பெற்ற அரசியல் ஏற்பாட்டில்

குடும்ப ஆட்சி கூட்டுக்கொள்ளை மாபியா கும்பல்
அரசியல் சகுனிகள் ஆச்சாரங்கள் என்றெல்லாம்
குடியரசுக்கு இங்கே குடமுழுக்கு பண்ணுகிறார்கள், அதனாலேயே மக்கள் நலம் குடிமுழுகிப்போயிருப்பது கண்டும் காணாமல்

ஆட்டம் போடுகிறார்கள் இது என்ன திருவிழாவா?
ஆரவாரத்துடன் அரசியல்வாதிகளை துதி பாடினால்
தொலைந்து போவது அட்டைக்கத்தி அரசியல் மட்டுமல்ல
இந்திய அரசியலமைப்பின் மேன்மையும் தான்.!

கவனம் கொள்ளுங்கள் காரியவாதிகளே..!!!

எழுதியவர் : செல்வமணி (12-Feb-17, 7:46 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 333

மேலே