கற்றனைத் தூறும்
சட்டென விழித்த விழிகளில்
பட்டென வழிந்த நினைவுகள்
நீய்!
விட்டென்னை விலகி நிற்பாயின்
தொட்டென்னை பழகி சாய்த்தாயே
நீ?
கேட்டென்னை குளவி யிருப்பினும்
சுட்டென்னை குளம் நிரப்பியதும்
நீரே!
பாட்டாலும் கேட்டாலும் வாரா மதி
பட்டும் கெட்டும் வருமெனின் யாதுமாகிய
நீயால்.
நட்ட விதை விருச்சமாகும்
நடா விதைகள் எச்சமாகும்
நான்.
தொட்டனைத் தூறும் மணற்கேனி
கற்றனைத் தூறும் அறிவு.
ஆம்.
© மனோஜ் கியான்