மனோஜ் கியான் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மனோஜ் கியான் |
இடம் | : கரூர் |
பிறந்த தேதி | : 24-Nov-1987 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 208 |
புள்ளி | : 24 |
எனைப் பற்றி எழுத நினைக்கையில் விரலொன்று மறுக்கிறது... உனை ஏன் வரையறுக்கிறாய்? வார்த்தைகள் வார்த்துவிடுமோ நீ யாரென்று?? மறுப்புகள் மரணிக்கும் வரை எனை யாரென்று என்னிடமே வினவுங்கள்.... நீ யாரென்று?? என் அடையாளம் பதிக்க முட்டி மோதும் இளங்கன்றாய்.... பறை கொட்டும் வரை நானறிவேன்... நான் யாரென்று.....
மீன்களோடு
அவர்களானார்கள்!
துடிக்கும் மீன்களாய்
துடித்தே வாழ்கிறார்கள்!
அலைகள் பாய்ந்து
அலையலானார்கள்!
காற்றைக் கிழிக்கும்
கூற்றன் ஆனார்கள்!
கடலும் மீனுமாய்
அவர்களும் சிறைப்பிடிப்பும்!
வலை விரித்தது மீன்களுக்காயெனினும்
இவர்களே வீழ்ந்தார்கள்!
தேசியக்கொடி வரைந்தாலும்
தமிழக மீனவனார்கள்!
கடல்நீர் உவர்க்க
கண்ணீரும் விட்டார்கள்!
இவர்கள் தேடல்கள்
மீன்களுக்கானது மட்டுமன்று!
குப்பத்து மீனவர்களெல்லாம்
குப்பை வாக்குக்கென்று!
புரியாமல் போனதே
இன்று!
நமக்கெல்லாம் இவையாவும்
ஏதொரு சேனலில் முக்கியச் செய்தி!
அவ்வளவே!
மீன்களோடு
அவர்களானார்கள்!
துடிக்கும் மீன்களாய்
துடித்தே வாழ்கிறார்கள்!
அலைகள் பாய்ந்து
அலையலானார்கள்!
காற்றைக் கிழிக்கும்
கூற்றன் ஆனார்கள்!
கடலும் மீனுமாய்
அவர்களும் சிறைப்பிடிப்பும்!
வலை விரித்தது மீன்களுக்காயெனினும்
இவர்களே வீழ்ந்தார்கள்!
தேசியக்கொடி வரைந்தாலும்
தமிழக மீனவனார்கள்!
கடல்நீர் உவர்க்க
கண்ணீரும் விட்டார்கள்!
இவர்கள் தேடல்கள்
மீன்களுக்கானது மட்டுமன்று!
குப்பத்து மீனவர்களெல்லாம்
குப்பை வாக்குக்கென்று!
புரியாமல் போனதே
இன்று!
நமக்கெல்லாம் இவையாவும்
ஏதொரு சேனலில் முக்கியச் செய்தி!
அவ்வளவே!
வலியொன்றை
பெறாமலே
வலிமையேது?
நிழலொன்றைப்
பெறாத
நிஜமுமேது?
உயிரொன்றைப்
பிடுங்காத
உயிருமேது?
கவலைகள்
ஏதுமில்லாத
காலைகளேது?
கனவுகளைத்
தேடாத
இரவுகளேது?
விடை
எழுதா
கணக்குகளேது?
இணை
பிரியா
கரங்களுமேது?
நீர்ப்
பிரிக்காத
கண்களுமேது?
பிரிவுகள்
நேராத
உறவுகளேது?
பிரிவொன்றை
சேர்க்கும்
உறவுகளேது?
உயிர் உறவொன்றைத்
தேடும்
உயிர்களுமேது?
யாதும்
அன்பெனில்
பிரிவுமேது?
அன்பிற்
தோற்காத
அகிலம்தானேது.....???
© மனோஜ் கியான்
சாயமற்ற
நின்விழி வழியும்
துளிகளினுடன்
என் பிம்பமும்.
விரல் நுனித்
தொட ஏங்கும்
துளிகளினுடன்
என் பிம்பமும்.
தொட்டால்
வீழ்ந்துவிடும்
துளிகளினுடன்
என் பிம்பமும்.
கொன்று தெறித்த
குருதியாய்!- நீர்த்
துளிகளினுடன்
என் பிம்பமும்.
விழிநீப்பின்
உயிர்பிரியும்
துளிகளினுடன்
என் பிம்பமும்.
சாயமற்ற
நின்விழி வழியும்
துளிகளினுடன்
என் பிம்பமும்.
விரல் நுனித்
தொட ஏங்கும்
துளிகளினுடன்
என் பிம்பமும்.
தொட்டால்
வீழ்ந்துவிடும்
துளிகளினுடன்
என் பிம்பமும்.
கொன்று தெறித்த
குருதியாய்!- நீர்த்
துளிகளினுடன்
என் பிம்பமும்.
விழிநீப்பின்
உயிர்பிரியும்
துளிகளினுடன்
என் பிம்பமும்.
சட்டென விழித்த விழிகளில்
பட்டென வழிந்த நினைவுகள்
நீய்!
விட்டென்னை விலகி நிற்பாயின்
தொட்டென்னை பழகி சாய்த்தாயே
நீ?
கேட்டென்னை குளவி யிருப்பினும்
சுட்டென்னை குளம் நிரப்பியதும்
நீரே!
பாட்டாலும் கேட்டாலும் வாரா மதி
பட்டும் கெட்டும் வருமெனின் யாதுமாகிய
நீயால்.
நட்ட விதை விருச்சமாகும்
நடா விதைகள் எச்சமாகும்
நான்.
தொட்டனைத் தூறும் மணற்கேனி
கற்றனைத் தூறும் அறிவு.
ஆம்.
© மனோஜ் கியான்
கிழிந்த ஆடை
வற்றிய மார்பு
குழந்தையின் கதறல்
காமன் கொலையுண்டான்!
கிழிந்த ஆடை
வற்றிய மார்பு
குழந்தையின் கதறல்
காமன் கொலையுண்டான்!
மேகங்களைப்
பிரியும்
மழைத்துளிகள்!
ஓடைகளைப்
பிரியும்
ஆறுகள்!
ஆறுகளைப்
பிரியும்
அணைகள்!
மீன்களைப்
பிரியும்
நீர்க் குமிழிகள்!
கரையைப்
பிரியும்
அலைகள்!
அலைகளைப்
பிரியும்
கால்கள்!
வலைகளைப்
பிரியும்
நண்டுகள்!
கைகளைப்
பிரியும்
நகங்கள்!
தென்றலைப்
பிரியும்
காத்தாடிகள்!
நிசங்கள்
பிரியும்
நீதி மன்றங்கள்!
கையூட்டுகளாய்ப்
பிரியும்
காதிதப் பணங்கள்!
எழுதுகோலைப்
பிரியும்
மைகள்!
உதடுகளைப்
பிரியும்
முத்தங்கள்!
சருகுகளைப்
பிரியும்
மரங்கள்!
மகரந்தங்களைப்
பிரியும்
பூக்கள்!
உறக்கங்களைப்
பிரியும்
தலையணைகள்!
மௌனத்தைப்
பிரியும்
வார்த்த
மேகங்களைப்
பிரியும்
மழைத்துளிகள்!
ஓடைகளைப்
பிரியும்
ஆறுகள்!
ஆறுகளைப்
பிரியும்
அணைகள்!
மீன்களைப்
பிரியும்
நீர்க் குமிழிகள்!
கரையைப்
பிரியும்
அலைகள்!
அலைகளைப்
பிரியும்
கால்கள்!
வலைகளைப்
பிரியும்
நண்டுகள்!
கைகளைப்
பிரியும்
நகங்கள்!
தென்றலைப்
பிரியும்
காத்தாடிகள்!
நிசங்கள்
பிரியும்
நீதி மன்றங்கள்!
கையூட்டுகளாய்ப்
பிரியும்
காதிதப் பணங்கள்!
எழுதுகோலைப்
பிரியும்
மைகள்!
உதடுகளைப்
பிரியும்
முத்தங்கள்!
சருகுகளைப்
பிரியும்
மரங்கள்!
மகரந்தங்களைப்
பிரியும்
பூக்கள்!
உறக்கங்களைப்
பிரியும்
தலையணைகள்!
மௌனத்தைப்
பிரியும்
வார்த்த
கலப்பைக் கூட
களைப்பாகிய போதும்
களிப்புடன்
கானம் பாடிய
கானம்பாடிகள்
காணமற்போன
கருணையான
கழனியிது!
தாலாட்டு
தாலசைக்க
தாய் மடியாய்
தரணியேந்த
தவழும்
தம் குழந்தையைத்
தாங்கியதும்
தறிக்கெட்ட இக்கழநிதான்!
சேற்றில்
சோரானதும்...
சேற்றால்
சோராவதும்...
சோராது
சேகரிப்பதும்
சேறு பூசிய
சேற்றானால்....!
வாய்ப் பிளந்து
வான் மழைக்காய்
வானிடம் ஏங்கும்
வயல்வெளிகள் பேசும்
வாய்ப்பிழந்து
வறுமையின்
வாயிற் அகப்பட்ட
வறியவன் கதையை...
பூமிய குளிர வச்சு
புதுநெல்ல வெதச்சு
பூஞ்சோலையா
புதுப் பயிர் வளத்து
புடுங்கியெடுத்து
புதுவயல் நட்டு
பூட்டு வெலஞ்சதும்
புது நெல் பொறக்கும்...