நின்விழி வழியும்
சாயமற்ற
நின்விழி வழியும்
துளிகளினுடன்
என் பிம்பமும்.
விரல் நுனித்
தொட ஏங்கும்
துளிகளினுடன்
என் பிம்பமும்.
தொட்டால்
வீழ்ந்துவிடும்
துளிகளினுடன்
என் பிம்பமும்.
கொன்று தெறித்த
குருதியாய்!- நீர்த்
துளிகளினுடன்
என் பிம்பமும்.
விழிநீப்பின்
உயிர்பிரியும்
துளிகளினுடன்
என் பிம்பமும்.