உனக்காக காத்திருக்க விரும்பவில்லை நான் 555

உயிரானவளே...
உன்னால் உருவான உலகம்
என் உனக்காக ஏங்குதடி இன்று...
உன் துளி கண்ணீரில் என்
சோகங்களை எல்லாம் ஆற்றிவிடுவாய்...
நீ தந்த நினைவுகள்
என் மரணம்வரை தொடருமடி...
மழலையை கொஞ்சும்போது
நீ என்னை கொஞ்சும்...
அம்முக்குட்டி மீண்டும் மீண்டும்
நான் அதையே சொல்கிறேன்...
மழலையும் புன்னகையில்
என் கன்னம் கிள்ளுதடி உன்னைபோலவே...
உன் பார்வை படாத
தொலைவில் நான் இன்று...
உன் வலிகள்
மட்டும் என்னுள்ளே...
வானவில் வண்ணம்
கொண்ட வாழ்க்கைக்கு...
நீ கொடுத்தது வின்னைப்போன்று
நிரந்தர வலிதான்...
உனக்காக மீண்டும் நான்
காத்திருக்க விரும்பவில்லை...
தொடர்கிறது என்
பயணமும் எதோ.....