மீன்+அவர்கள்
மீன்களோடு
அவர்களானார்கள்!
துடிக்கும் மீன்களாய்
துடித்தே வாழ்கிறார்கள்!
அலைகள் பாய்ந்து
அலையலானார்கள்!
காற்றைக் கிழிக்கும்
கூற்றன் ஆனார்கள்!
கடலும் மீனுமாய்
அவர்களும் சிறைப்பிடிப்பும்!
வலை விரித்தது மீன்களுக்காயெனினும்
இவர்களே வீழ்ந்தார்கள்!
தேசியக்கொடி வரைந்தாலும்
தமிழக மீனவனார்கள்!
கடல்நீர் உவர்க்க
கண்ணீரும் விட்டார்கள்!
இவர்கள் தேடல்கள்
மீன்களுக்கானது மட்டுமன்று!
குப்பத்து மீனவர்களெல்லாம்
குப்பை வாக்குக்கென்று!
புரியாமல் போனதே
இன்று!
நமக்கெல்லாம் இவையாவும்
ஏதொரு சேனலில் முக்கியச் செய்தி!
அவ்வளவே!