ஏது

வலியொன்றை
பெறாமலே
வலிமையேது?

நிழலொன்றைப்
பெறாத
நிஜமுமேது?

உயிரொன்றைப்
பிடுங்காத
உயிருமேது?

கவலைகள்
ஏதுமில்லாத
காலைகளேது?

கனவுகளைத்
தேடாத
இரவுகளேது?

விடை
எழுதா
கணக்குகளேது?

இணை
பிரியா
கரங்களுமேது?

நீர்ப்
பிரிக்காத
கண்களுமேது?

பிரிவுகள்
நேராத
உறவுகளேது?

பிரிவொன்றை
சேர்க்கும்
உறவுகளேது?

உயிர் உறவொன்றைத்
தேடும்
உயிர்களுமேது?

யாதும்
அன்பெனில்
பிரிவுமேது?

அன்பிற்
தோற்காத
அகிலம்தானேது.....???

© மனோஜ் கியான்

எழுதியவர் : மனோஜ் கியான் (16-Jul-17, 1:09 am)
சேர்த்தது : மனோஜ் கியான்
பார்வை : 117

மேலே