முகமூடி விலக்கு

ஐ ''டிஸ்லைக்'' இட், மை டியர். . .
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

ஆடைக்குறைப்பு
ஆறு இன்ச்சு அரிதாரம்
கணுக்கால், வலியால் கதறும்
ஹை ஹீல்ஸ், ஸ்டிலெட்டோ
தாய்மொழி சுளுக்கு கொண்டதைப்போல்
கடித்துத் துப்பி வெளிப்படும் உரையாடல்

பாழாய்ப்போன 'கூல்-ஹாட்' மந்தையூடான ''யுவதிசம்''. . .

யாவும், ''கரைகின்ற தற்காலிகங்கள்'' என்பதை மறந்து திமிறும்
யவ்வன கர்வம். . .

பிறந்த மண் பெருமைகளை, போற்றவேண்டாம் பரவாயில்லை!
ஆனால், வேறு தேசத்தில் நம் வேர்களை எரிப்பது
பெண்ணியத்தின் பிதற்றலியலன்றி வேறென்ன?

புதுமைப்பெண்
வாவ்!
கல்வி செல்வம் வீரம்
அனைத்தும் அழகாய் அடைந்தாளும் தேவிகள்
கலாச்சாரம் என்பதில் மட்டும்
சடாரென சரிந்து
பிளாஸ்டிக் பூக்களை முகர்கிறார்கள்...

இதில் வேடிக்கை என்னவெனில்
''ஆஹா அற்புதம்! சுகந்த மணம் வீசுகிறதே...'' என முழங்கும்
எத்தனை விசிறிகள் பிளாஸ்டிக் பூக்களுக்கு!
பாசாங்குத்தனத்தின் உச்சம்!

வருக வருக!
படித்து விட்டு
புரிந்து கொண்டு
பற்றி எரியும் சினம் கொண்ட
சீண்டப்பட்ட யாவரும் வருக
...
''...குற்றம் குற்றமே!"

அக்கறைக் கொண்ட அன்பானது
கசந்தாலும் சொல்லப்படும் உண்மையில் தான் அதிகம் மிளிர்கிறது
முழித்துக்கொள்! இது, நான் அறிந்த நீ இல்லை
முகமூடியை கிழித்துவிட்டு
முகம் கழுவிவிட்டு வா
நான் பூசி விடுகிறேன்
உன்னையே உனக்கு, உண்மைநிறத்தில். . .
ஒரு வேளை இதுவும் நீ தான் என்றால்
சற்று வலிக்கிறது
நேற்று வரை நான் அறிந்த நிஜம் நலிகின்றதே...

எழுதியவர் : மதுமதி.H (15-Jul-17, 10:21 pm)
பார்வை : 499

மேலே