இல்லற அவலம்

#இல்லற_அவலம்...

ஒன்னுமே இல்லை...
ஆனால் சண்டை நடக்குது பாரு...
ஊரே வேடிக்கை பார்க்குது பாரு...
எலியும், பூனையுமாய் கணவன் மனைவியை பாரு...
வேடிக்கை படு ஜோரு...

எதுக்கெடுத்தாலும் எதிர்த்துப் பேசுகிறாளென்று சீறும் கணவன்,
எனக்கு பேச உரிமை இல்லையாயென்று விம்மியழும் மனைவி,
அப்பா, அம்மா சண்டைக்கண்டு பயந்து நடுங்கும் குழந்தை...
என்ன சொல்வேன் அன்பை மறந்து மதிகெட்ட மாந்தர்களின் செய்கைக்கு?

தாய்வீட்டிற்கு வந்த மனைவியையும் பிள்ளையையும் அழைத்துப் போக பின்னாடியே வந்த கணவனென்ன அன்பற்றவனா??

பயப்படும் குழந்தையை இடுப்பில் இடுக்கிக்கொண்டு விம்மியழும் மனைவியென்ன இதயமற்றவளா??
உணர்வற்றவளா???

உறவினர் கூடி அவரவர் அறிவிற்கெட்டிய அறிவுரை சொல்ல, ஒருவழியா மனைவி சமதானமாக, கணவனின் வண்டியில் ஏறியவள், " வீட்டிற்குச் சென்றாலே ஒரே சண்டைதான். இப்போ போனதும் மறுபடியும் சண்டைப் போட்டால் செத்துவிடுவேன். ", என்று கூறிய வார்த்தைகளைக் கேட்டே உணர்ந்தேன் அந்த உள்ளம் படும் வேதனையை...
என்ன செய்வேன்?

அறியாமையில் மூழ்கிய உள்ளங்களிடம் உண்மையை எவ்வாறு எடுத்துரைப்பேன்?

அறியாமை இல்லறம்...
என்றுமே அவலமே...

உண்மையை உணருங்கள் உள்ளங்களே...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (15-Jul-17, 10:12 pm)
Tanglish : yillara avalam
பார்வை : 3115

மேலே