அவளன்பு மறத்தலாமோ

வட்டநிலா வானத்தில் வந்தமர
வீண்மீன்கள் அதனை சுற்றிவர
கட்டிலில் மல்லாந்தே படுத்து
கண்கொண்டு பார்த்த அழகெங்கே!
கவிஞர் கே. அசோகன்

கீச்சென்ற கத்துகின்ற இராட்டினத்தில்
கயிற்றினை இழுத்தேதான் நீரிறைத்து
முழுவதுமாய் நனைந்தே குளித்தோம்
முழுவாளி தண்ணீருக்கு வழியெங்கே?

குயில்பாடி முடித்ததன் பின்னாலே
கொக்கரக்கோ சத்தம்தனை கேட்டே
ரயில்பிடிக்க ஓடிய ஓட்டமென்ன ?
ராத்திரியை பகலாக்கி வாழ்வதென்ன ?

களிஉருண்டை அதனோடு குழம்பூற்றி
கடித்து கொள்ள வெங்காயம் ஓர்துண்டு
கைகளிலே இட்டவள் அன்னைதானே!
கனிவான அவளன்பு மறத்த லாமோ ?

கவிஞர் கே. அசோகன்

எழுதியவர் : கவிஞர் கே. அசோகன் (15-Jul-17, 9:17 pm)
பார்வை : 110

மேலே