மரணத்தைத் தொட்டு சனனத்தைத் தந்திடும் பெண்மை

மரணத்தைத் தொட்டு சனனத்தைத் தந்திடும் பெண்மை !!!

கம்பர் சிறப்பு சான்றிதழ் போட்டியாளர் ( 7 )

கருவறையில் உறங்கிடவும் கண்ணெனவே காத்திடுவாள்
அருமையான தாயவளே அன்பிற்கோர் சான்றாவாள்.
பெருமைபல பிறர்முன்னால் பேசிடுவாள் பெருமிதமாய்
தருகின்ற உதிரமுமே தாய்ப்பாலாம் கருவறையில் .


உறங்குன்ற சிசுவினுடை உணர்வான மூச்சினையும்
உறவாகித் தன்னுள்ளே உயிராகக் கேட்டிடுவாள்
மறக்காது மழலையுமே மாசற்ற காத்தலினால்
பிறக்கின்ற நாள்வரையும் பிள்ளையுமே உறங்கிடுமே !


கோயில் கருவறை கோடிகள் உண்டென்பேன் .
வாயில் வகையுற வானமெனக் கட்டுவர்
பாயில் சுருண்டிடும் பாவைக்கே ஆனந்தம்
கையில் குழந்தையும் கருவாகி வந்திடும் !!!


அறைகள் பலவும் அணியென நிற்குமுலகில்
கறைகள் மனத்தில் கடுகளவும் இல்லாத
மறைபொருளன்றோ மகவின் கருவறையும் ஈங்கே
மாசற்றக் கோயிலாம் மரணத்தைத் தொட்டதால் .


மண்ணுலகம் உள்ளவரை மாறிடுமா பென்மையுமே
கண்ணீரால் தாலாட்டுக் காவியமாய்ப் பாடிடுவாள்
எண்ணற்ற துன்பங்கள் ஏற்பாள் கருசுமக்க
விண்ணிலும் அன்னை வியப்பாம் சனனத்தில் !!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (15-Jul-17, 7:18 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 82

மேலே