பிரிவின் பிரியம்
மேகங்களைப்
பிரியும்
மழைத்துளிகள்!
ஓடைகளைப்
பிரியும்
ஆறுகள்!
ஆறுகளைப்
பிரியும்
அணைகள்!
மீன்களைப்
பிரியும்
நீர்க் குமிழிகள்!
கரையைப்
பிரியும்
அலைகள்!
அலைகளைப்
பிரியும்
கால்கள்!
வலைகளைப்
பிரியும்
நண்டுகள்!
கைகளைப்
பிரியும்
நகங்கள்!
தென்றலைப்
பிரியும்
காத்தாடிகள்!
நிசங்கள்
பிரியும்
நீதி மன்றங்கள்!
கையூட்டுகளாய்ப்
பிரியும்
காதிதப் பணங்கள்!
எழுதுகோலைப்
பிரியும்
மைகள்!
உதடுகளைப்
பிரியும்
முத்தங்கள்!
சருகுகளைப்
பிரியும்
மரங்கள்!
மகரந்தங்களைப்
பிரியும்
பூக்கள்!
உறக்கங்களைப்
பிரியும்
தலையணைகள்!
மௌனத்தைப்
பிரியும்
வார்த்தைகள்!
எதுவும்
பிரிவதாய்
வருத்தமில்லை!
வருத்தங்கள் - எனைப்
பிரியும்
உனக்காய் மட்டும்...!
எத்தனைப்
பிரியம்
உன்னில் மட்டும்.....!