அவளை அவளேஅவளால்

அவளை அவளே பார்த்தாள்.....!
கனவில் அல்ல - என்.....!
கண்களில்......!
அவளை அவளே ரசித்தாள்...!
கண்ணாடியில் அல்ல-என்
கவிதைகளில்....!

அவளை எண்ணி அவளே சிரித்தாள்...!
பைத்தியமல்ல அவள் என்னை
காதல் செய்வதினால்...!

அவளை அவளே வதைத்தாள்....!
அறியாமையினால் அல்ல..-எனை விட்டுப்
பிரியாமையினால்....!

அவளை அவளே சிதைத்தாள்.....!
மனமாற அல்ல...-வேறவனுடன்
மணமானதால்...!

எழுதியவர் : இரா.வீரா (30-Apr-15, 8:01 pm)
பார்வை : 366

மேலே