மரணம் என்னை தழுவும் தருணம் வரை

என்னில் அடங்கா உன் நினைவுகள் அது
என் நெஞ்சில் புதைந்திருந்தாலும் கூட
என் தேடல் மட்டும் இன்னும் குறையவில்லை
ஆம்...காற்றில் தினம் தேடி கொண்டிருக்கிரேன்
நீ பேசிப் போன வார்த்தைகள் எங்கே என்று
பெண்ணே,உறங்காது தினம் தவிக்கிரேன்
ஏன் தெரியுமா மீண்டும் உன் அன்பு எனக்கு கிடைக்காத என்றுதான்.
நிரந்தரம் இல்லா என் உயிருக்குத்தான்
எத்தனை வலிகள் உன்னால்
தினமும் உன் முகத்தை பார்க்கும் பொழுதும்
தினசரி உன் குரலை கேட்க்கும் பொழுதும்
அனுதினம் என்னருகில் நீ வரும் பொழுதும்
என் தேகம் அது சொர்க்கத்தில்
வாழ்வதாய்உணர்ந்தாலும் கூட
என் மனமது நரகத்தில் வசிப்பதாகவே உணர்கிறது.
அழகான உள்ளத்தை எனக்கு கொடுத்த
இறைவன் ஏனோ அதறக்கு இணையான
உருவத்தை கொடுக்க மறந்து விட்டான்
அதனால் தான் உன் இதயம் என்னை
ஏற்றுக் கொண்டாலும் கூட
உன் இமைகள் என்னை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது.
அன்பே கனவுகள் ஒரு நாள் நிஜமாகலாம்
நினைவுகள் நிச்சயம் உருமாறலாம்
என ஆசைக் கற்கள் கொண்டு மனதில் கோட்டைக் கட்டினேன்.
கட்டி என்ன பயன் உன் மௌனம் அதனைத் தாங்காமலே
அது உடைந்து விட்டது.
இன்னொரு முறையா இந்த வாழ்க்கை
வாழப் போகிரோம் என்பதை நினைத்தே
தினம் சாகிரேன் பெண்ணே.
என்னை ஏற்றுக் கொள்ளும் மனமது
உன்னிடத்தில் இருந்தால் இனிவரும்
நாட்கள் உன்னோடு வாழ்கிறேன்
இல்லையென்றால் இனிவரும் நாட்கள்
எல்லாம் உன் நினைவுகளோடு வாழ்கிறேன்
மரணம் என்னை தழுவும் தருணம் வரை....

எழுதியவர் : கண்ணன் (2-May-15, 4:21 pm)
பார்வை : 1084

மேலே