நினைவலைகள்...
நினைவிருக்கிறதா பெண்ணே...!
வருடம் ஒருமுறையென தவறாது வரும் கோடை விடுமுறைக்கு
உனக்காக நேரம் ஒதுக்கி உயிரிலே சிற்பம் செதுக்கிய சிற்பி நான்...
எதார்த்தமாய் எனைக்கண்டு உனை நீயே அடையாளப்படுத்திய அந்நொடி
என்ன நடந்ததென்றே அறிந்திடாத அந்நிலையில் என்மனதை களவுகொண்டாய்...
என் கருவிழிகளைக் கவ்விச்சென்ற கயல்விழியுன்னை
உன் கல்லூரிக் காலம்வரை நான் கானவில்லை...
தொலைதூரப் பயணமொன்றில் உன் அலைப்பேசி அழைப்பினில்
தொலைந்திடாத உன் நினைவுகள் தொடர்ந்து எனைத்துரத்த...
தொற்றிக்கொண்டது என்னுள் காதல்...
அதைப் பற்றிக்கொண்டது உந்தன் காதல்...
மீண்டும் ஓர் கோடைவிடுமுறை...
உதித்த காதலை பகிர்ந்துகொண்டோம்
விதித்த விதிகளுக்கு செவிசாய்த்தோம்...
காலம் வரும்வரை காத்திருக்கச் சொல்லி
நீயோ கல்விப் பயணம் தொடரச் சென்றாய்...
நீ திரும்பும்வரை திருந்திடாத என்மனதை
நான் திரும்பமுடியா தீவிற்குள் சிறைவைத்தேன்...
நீ திரும்பும் அவ்வேளை
உன்னுடனிருக்க நான் எண்ணி..
திருமணம் குறித்த ஆவலில் திரும்பியது என்மனம்
மீண்டும் ஒரு கோடைவிடுமுறையில்...
படித்துமுடித்த என் பட்டத்து இளவரசி அவ்வேளை
பாதிவழியிலேயே என் காதலைத் தொலைத்திருந்தாய்...
நடந்ததென்னவென்று நானறியும் முன்னே
காதலுக்குக் கல்லரைகட்டி அதில் எட்டிவேரை இட்டிருந்தாய்...
பிறந்திட்ட இம்மண்ணில் நான்
வளர்த்திட்ட என் காதலை நீ துறந்திட்ட காரணம்தான் ஏனோ...?
இதுவரை...
புரியாத புதிராய்...