செல்லக்குட்டி தருவிக்கு

மெல்லிய இதழ்களை கூட்டிநீ
பேசத்துடிக்கையில் அண்ட
மொழிகள் தோற்று போகிறது ..

அனிச்சைமலர் பாதங்களால்
அடியெடுத்து நடக்கத் துடிக்கையில்
அகிலத்தின் நடனங்கள் தோற்று போகிறது ...

நீகண்சிமிட்டும் அழகினிலே
கடவுளானவனின் கஷ்டம்கூட
கற்பூரமின்றி கரிகிறது ...

கடல்போல சூழும் துன்பத்தில் தத்தளிக்க
தருவி என்றழைத்ததும் துடுப்பின்றி
கரைசேர்கின்றேன் என்ன மாயம் ?
ஓ !நீமட்டும்தானே பேசும் செல்வம்

என்செல்லமே உன்னைக் கொஞ்சிட
வார்த்தைகளற்று வாரியணைக்கிறேன்
வராத இன்பமெல்லாம் வந்துசேர
கரையாத துன்பமெல்லாம் கரைகிறதடா !

குட்டிக்கைகளை நீட்டி உந்தையின்
சட்டைபைதனில் கிடக்கும் எழுதுகோலை
எடுத்துநீ கிறுக்கி கம்பனை காவியமாக்கி
அக்காகிதத்தை கசக்கி ரவிவர்மனை
ஓவியமாக்கிவிட்டாயே !

தருவி என்கையில் அருவிபோல்
கொட்டும் ஆனந்தத்தை அளந்து
ஏட்டினில் வடிக்க முடியமால்
அரைகுறையாய் முடிக்கிறேன் ....


===================================================

அம்மா என்றழைப்பதை விடுத்து
அப்பாவென்று அழைக்கிறாயே ?
ஹோ !உனக்கும் புரிந்துவிட்டதோ
உந்தையின் மீதான எனதன்பு !

எழுதியவர் : (17-Feb-17, 1:04 pm)
சேர்த்தது : பிரியாராம்
பார்வை : 98

மேலே