காதல்

உருச்சு வச்ச உன் உருவமோ
என் உசுர கடஞ்சு போகுது....
பதுக்கி வச்ச என் ஆசை எல்லாம்
உன்னில் உரக்க சொல்ல மனசு ஏங்குது....
கொலை பசி எனகிருந்தும் உன் மொகத்தை நான் பாத்தா வந்த பசியும் சொல்லாம கொள்ளாம எகிறி எட்ட ஓடுது....
ஆத்து வெள்ளதுல சிக்கிகிட்ட சிறுத்த போல
உன் பார்வ வெள்ளம் வந்து என்ன அடித்து போக பாக்குது ....
இத்தனை இருந்தும்,
பாலாய் போன என் இளமை பருவமோ
உன் பின்னே மோகத்தோடு சுத்திக்கிட்டு தவியாய் தவிக்குது...

எழுதியவர் : கவிழகி செல்வி (27-Feb-17, 5:26 pm)
Tanglish : kaadhal
பார்வை : 89

மேலே