தமிழ் பூமித்தாய்

தமிழ் பூமித்தாயின்
ரத்தத்தை உறிஞ்சி
போத்தல்களில்
அடைத்து தண்ணீராய்
விற்க அனுமதி கொடுத்துவிட்டு
அண்டை மாநிலத்தில்
அன்றாட தேவைக்கு
தண்ணீர் கேட்டு
அலைகிறார்கள்
அறிவு கெட்ட தமிழ் மக்கள்
தமிழ் பூமித்தாயின் பொன்
மார்பகங்களை அறுத்து
மரங்களாகவும், மலைகளாகவும்
விற்க அனுமதி கொடுத்துவிட்டு
மழை இன்றி
அலைகிறார்கள் அறிவு கெட்ட தமிழ் மக்கள்
தமிழ் பூமித்தாயின் அழகிய கண்களை
அழித்து விட்டு
அணுஉலைக்கு
அனுமதி கொடுத்துவிட்டு
அழிவின் விளிம்பில்
வாழ்கிறார்கள் ஆண்ட தமிழ் மக்கள்
தமிழ் பூமித்தாயின் தன்னிகரற்ற
மூச்சு காற்றை
நியூட்ரினோ, மீதேன் எறிகாற்றாக
எடுக்க அனுமதி கொடுத்துவிட்டு
நச்சுகாற்றை சுவாசித்து
சாகிறார்கள் நம் தமிழ் மக்கள்
தமிழ் பூமித்தாயின்
அழகிய தசைகளான
ஆற்று மணலையும் ,
விளைமண்ணையும்
வெட்டி விற்க அனுமதி கொடுத்துவிட்டு
வெளிநாடுகளில் வேலைகாரனகவும்
விபச்சாரியாகவும்
வெட்கம் கெட்டு வாழ்கிறார்கள்
தமிழ் மக்கள்
தமிழ் பூமித்தாயின் நாடி நரம்புகளான
செடி, கொடி சிட்டுக்குருவி,காக்கைகளை அழிக்க
அலைகோபுரங்களுக்கு
அனுமதி கொடுத்துவிட்டு
நலிந்த ஒளிந்து வாழ்கிறார்கள்
நன்றி கெட்ட தமிழ் மக்கள்
தமிழ் பூமித்தாயின் அழகிய கழுத்தான
அரசியல், அரசவையையும்
மக்களவை, மாநிலங்களவையையும்
மகா அயோக்கியகளை
அமர அனுமதி கொடுத்துவிட்டு
அன்டி, ஒன்டி வாழ்கிறார்கள் அடிமை தமிழ் மக்கள்
தமிழ் பூமித்தாயின் அழகிய
கைகளை முறித்து கச்சத்தீவாக
தாரைவார்த்து
கொடுத்த கருநாக கருணாநிதியை
மறுபடியும் மறுபடியும்
முதலமைச்சர் ஆக்கினார்கள்
அறிவு கெட்ட தமிழ் மக்கள்
தமிழ் பூமித்தாயின்
அழகிய கண்ணக்குழிகளான
ஆறு, குளம் எறி குட்டை களை
அபகரித்து பட்டா போட்டு விற்க
அனுமதி கொடுத்துவிட்டு
அண்டை நாடுகளில்
பஞ்சாப் பராரிகளாக
பஞ்சம் பிழைக்க
பாரமறராய் அலைகிறார்கள்
பாவம் செய்த தமிழ் மக்கள்
தமிழ் பூமித்தாயின் பொன் உடம்பில் அங்கு அங்கே
பெட்ரோல் குழாய்களையும்
கெய்ல் எறிவாயு குழாய்களையும்
புதைக்க அனுமதி கொடுத்துவிட்டு
ஆரோக்கியம் கெட வாழ்ந்து
சாகிறார்கள் தமிழ் மக்கள்
தமிழ் பூமித்தாயின்
நிறைமாத கருவான என் ஈழ தேசத்தை
இந்தியனாய் இருந்து எட்டி மடியில்
உதைத்து கருவை கலைத்து விட்டு
தனிநாடு இன்றி
ஈன கெட்டு அலைகிறார்கள்
தமிழ் மக்கள்
தமிழ் பூமித்தாயின்
அழகிய கனிம வள
கால்களை உடைத்து
ஊனமாக்கி அழிக்க
அனுமதி கொடுத்துவிட்டு
ஊர் ஊராக திரிகிறார்கள்
உணர்வு கெட்ட தமிழ் மக்கள்
தமிழ் பூமித்தாயின்
பச்சை புடவையான
மண்ணையும், விவசாயத்தையும், விவசாயிகளையும்
தற்கொலை செய்ய விட்டு
தமிழ் தாயை மானபங்கம் செய்கிறார்கள்
தன் உரிமை விற்ற தமிழர்கள்
தமிழ் கோடி ஏந்துவோம்
தரணியை ஆளுவோம்
புலிக்கொடி ஏந்துவோம்
பகை சிங்களவனை விரட்டுவோம்
எங்கள் பூமியை
எங்கள் வளம்
என்று சங்கே நீ
முழங்கு ...............................