மண்ணுலகம் தழைத்திடவே

#பைநிறைய காசுபணம்
பகிர்ந்தளித்து மகிழ்வோமே
#கையினாலே செய்கின்ற
கொடையாவும் #வாழவைக்கும்
#மைகொண்டு எழுதிடுவோம்
மலரட்டும் மனிதநேயம்
#வைக்கின்ற மறைபொருளை
வேண்டுவோர்க்குத் #தாருங்கள் .
#ஆநிரைகள் நிறைந்ததொரு
அகிலத்தைப் படைத்திடுவோம் .
#மாமழையும் பெய்திடுமே
மண்ணுலகம் தழைத்திடவே !
#தைமகளின் மகிழ்ச்சியினால்
தரிசெல்லாம் கதிராகும்
#வையகத்தில் வாழ்ந்திடுவோம் !!!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (27-Feb-17, 3:04 pm)
பார்வை : 52

மேலே