நீயும் ஒரு பண் பாடு

பண் பாடு...
பண் பாடு...
எது நம் பண்பாடு?....
நற்பண்போடு வாழ்வதே நம் பண்பாடு....

பண் பாடு....
பண் பாடு.....
பாடுபடுபவனுக்கே பலன் கிடைக்க வேண்டுமென்றே
நீயும் என்னோடு சேர்ந்தே ஒரு பண் பாடு.....

பண் பாடு... பண் பாடு....
பெண்ணென்பவளென்ன உயிரற்ற காட்சிப் பொருளா??...
ஆடைகளுக்கென்ன தட்டுபாடு???....
சிந்தித்தே அன்போடு நீயும் ஒரு பண் பாடு....

பண் பாடு.... பண் பாடு....
யாவருக்கும் வேண்டுமே மனக்கட்டுபாடு.....
தூய்மையோடு எதையும் நாடு...
என்றே ஒழுக்கத்தோடு நீயும் ஒரு பண் பாடு....

பண் பாடு...
பண் பாடு....
அன்போடு வீடு தேடிவந்தவர் எதிரியே ஆனாலும், அவர்பால் அன்பு கொண்டு இன்முகத்தோடு,
வரவேற்று, வயிறு நிறைய உணவளித்து,
உள்ளம் மகிழ உபசரித்து வழியனுப்பி வைப்பதே தமிழர் பண்பாடு....
அதுவே மனிதப் பண்பாடு என்றே நீயும் ஒரு பண் பாடு.....

பண் பாடு.... பண் பாடு....
தன்னில் அடக்கத்தோடு வாழ்ந்தவனே கடவுளின் நிலைக்கு உயர்ந்து நிற்கிறான் சிறப்போடு....
தற்பெருமை பேசுதலாகாது என்றே நீயும் அறிவோடு ஒரு பண் பாடு....

பண் பாடு....
பண் பாடு....
உயிர்கள் யாவும் வாழட்டுமே தத்தம் உரிமையோடு....
மனிதர்களே வாழுங்களே மனிதநேயத்தோடு....
என்றே கருணையோடு நீயும் ஒரு பண் பாடு....

பண் பாடு... பண் பாடு....
உனது வீழ்ச்சி கண்டு நீ கவலை கொள்வதற்கு உனது வாழ்க்கையொன்றும் முடிந்துவிடுவதில்லை இன்றோடு....
சோதனைகள் பல தாண்டினாலேயே சாதனைகள் பல சாதிக்கலாமென்றே தைரியத்தோடு நீயும் ஒரு பண் பாடு....

பண் பாடு.... பண் பாடு....
ஒருவேளை உணவளித்தால் நம்மைக் கண்டே நாய் வாலாட்டுமே நன்றியோடு....
அனுதினமும் ஒவ்வொரு நொடியும் உயிர் சுவாசம் தரும் காற்றை நாம் நேசிக்கிறோமா நன்றியோடு?....
விழாது தாங்கும் பூமி மதிக்கிறோமா நன்றியோடு??....
மண் தரையிலேயே உட்கார்ந்தால் தரம் தாழ்ந்தவரென்று உரைப்பவரோடு சேராது, இயற்கையின் துணையோடு நீயும் ஒரு பண் பாடு.....

பண் பாடு....
பண் பாடு.....
புற உடலழகை மறந்து,
அகத்தின் அழகையே பண்போடு பாராட்டியே நீயும் ஒரு பண் பாடு....

பண் பாடு....
பண் பாடு.....
மனிதர்களின் ஆற்றலை மனிதர்களே உணர்ந்து கொள்ளும் வகையில் நீயும் ஒரு பண் பாடு.....

பண் பாடு....
பண் பாடு....
பாசத்தோடு மழலையர் மொழியிலே நீயும் ஒரு பண் பாடு....
பண் பாடு....
பண் பாடு....
உள்ளம் திறந்தே, கவலை மறந்தே நீயும் என்னோடு, ஒரு பண் பாடு.....

பண் பாடு.... பண் பாடு....
நம்பிக்கையோடு, அடிக்கடி மாறாத நிலைப்புத் தன்மையோடு, நன்னெறிகளோடு வாழ்வதே நம் பண்பாடு என்றே நீயும் என்னோடு சேர்ந்தே ஒரு பண் பாடு....
பண் பாடு.... பண் பாடு.....

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (2-Mar-17, 8:11 am)
பார்வை : 1295

மேலே