நிரந்தரம் இல்லாத உறவுகள்

நிரந்தரமில்ல உறவுகள்

உறவுகளை தேடித்தேடி
களைத்து போகிறேன் கவலை
இல்லாத வாழ்க்கை வாழ்வதற்கு
இதுதான் உன்மையான உறவு என்னும்
என்னம் ஒரு சில நாட்களில் பொய்யாகின்றது....!

காரணம் தேடியும் சோர்ந்து போகிறேன்
ஒரு சில வினாடிகளில் இதுதானா...
வாழ்க்கை என்று என்னத்தோனுகின்றது.
மனதில் ஆசை எனும் பூகம்பம் பூக்களாய்
பூக்கின்றது..!

நிம்மதியை தேடி அலையும் மனமோ
இன்று நிர்க்கதியாய் நிர்மூலமாகியது.
உறவுள் என்றும் உறுவுக்காய் அடித்தளம்
இடுமோ என்ற சந்தேகம் மனதில் ஊசலாடுகின்றது......!

உயிருக்கு உரம் இடுகின்ற உறவுகள்
கானல் நீர்போல காணாமல் போகின்றன..
மனமோ மாறான கோணத்தில் திசைமாறுகின்றது நிரந்தமில்லாத உறவுகளால்......!!!

எழுதியவர் : kupenthiean (4-Mar-17, 11:11 pm)
சேர்த்தது : kupenthiran 309
பார்வை : 970

மேலே