பொங்கி எழு தோழா
****************************
பொங்கி எழு தோழா!!!!!
****************************
பொங்கி எழு தோழா
புயலாய் மாறி வாடா
இழந்ததை மீட்ப்போம் தோழா
இருப்பதை காப்போம் வாடா
தமிழ் இனத்தைக் காக்க வாடா
தமிழ்நாட்டைக் காக்க வாடா
உன் இனத்தை அழித்திடவே
உருவாகுது சதி திட்டமே
அணு உலை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், ......
இன்னும் எத்தனையோ?
விளைநிலங்கள் வீணாய்ப் போகும்
விவசாயம் அழிந்தேப் போகும்
சோற்றுக்கு கையேந்த வேணும்
சோகங்கள் நிகழும் அன்றாடும்
உயிரினங்கள் மடிந்தேப் போகும்
தமிழ்நாடே சுடுகாடாய் மாறும்
எத்தனையோ சதிகள் இந்த மண்ணிலே
ஒற்றுமையே ஆயுதமாய் நம் கையிலே
இளைஞர்களின் சக்திக்கு இணையில்லை எதுவும்
கைகோர்த்து களம் காண வேண்டும்
மாணவர்களின் சக்தி மகத்தானது
மாற்றங்களை உருவாக்க சரியானது
நீரின்றி உயிர்களில்லை
நிலமின்றி விவசாயமில்லை
தடுத்திடு தமிழா தடுத்திடு
சதிகளை வேரோடு அறுத்திடு
புறப்படு தமிழா புறப்படு உன் தலைமுறையை காத்திடு
புறப்படு தமிழா புறப்படு
இன்று நெடுவாசல்
நாளை உன் வாசல்
முளையிலே கிள்ளி எறிந்திடு
முடிவுரை எழுதி முடித்திடு
சோறு போடும் தெய்வங்களை காத்திடு
விவசாயத்திற்கு புத்துயிர் ஊட்டிடு
பொங்கி எழு தோழா
புயலாய் மாறி வாடா
நீரை காக்க போராட்டம்
நிலத்தை காக்கப் போராட்டம்
மாட்டைக் காக்கப் போராட்டம்
தமிழனாய் வாழ்வதே போராட்டம்
பசியில் மடியுது ஒரு கூட்டம்
பணத்தில் புரளுது ஒரு கூட்டம்
இந்தியா விவசாய நாடா?
இல்லை வியாபாரி வீடா?
அள்ளி செல்கிறான்
நம்மைக் கொல்கிறான்
இயற்கை வளங்கள் எல்லாமே காக்க வேண்டும்
விவசாயிகளை கடவுளாய் போற்ற வேண்டும்
என்றும் விவசாயமே நம் உயிர் மூச்சு
நீ உயிர் வாழ்வதே அதற்கு சாட்சி
பொங்கி எழு தோழா
புயலாய் மாறி வாடா
***************************
தோழன் திரு
***************************