யாரும் படிக்க வேண்டாம்

வாய்ப்பா இல்லை
வாழ்கையில்

திறமை இருந்தால்
திறக்காத கதவுகளே இல்லை……

வாய்ப்பு மறுக்கப்பட்டால்
மகிழ்ந்திடு…..!!
அதை விட பெரிய
வாய்ப்புகள் காத்திருக்கிறது………..
ஒரு நாள் நீ சிலருக்கு
வாய்பளிப்பாய்…..

துன்பம் ஒரு நாளும்
உன்னை துறத்தாது..
நீ அதன் முன்னால் ஓடி
கொண்டிருக்கிறாய்………!!
தொடர்ந்து ஓடு
வெற்றி கொள்வாய்…………………….


வாழ்க்கை முழுக்க
போட்டிகள் இல்லை
சவால்கள் மட்டுமே……………………..!!
சவாலை சமாளிப்பவன்
சானக்கியன் ஆகிறான்……………..
போட்டி என்று நினைப்பவன்
ஏமாந்து போகிறான்………………………………..

அரசியல் படி
ஒரு படி முன்னேறு………..!!

தவறை தட்டி கேட்க
வழி இல்லையெனில்…
நீ யாருக்கும் செய்யாதிரு
அதுவே சாலச்சிறந்தது………….

புத்தகத்தை காதலி…!!
அதை விட உன்னிடம்
மனம் திறந்து பேசுபவள்
யாருமில்லை………………………


வாழ்கையை வெறுக்காதே
நீ வாழப்பிறந்தவன்

எதற்கும் தயங்காதே………
வெளிப்படையாக பேசு……………….

ஆண் , பெண்
வித்தியாசம் இல்லாமல்
நட்பு கொள்……………………..

உனக்கென எல்லைகள்
வகுக்காதே………………….
தினமும் ஒன்றை கற்றுக்கொள்….
கற்றுக் கொடு………………!!

யார் மீதும் பரிதாபம்
கொள்ளாதே…………….
உன் அன்பு தான்
அவர்களுக்கு தேவை………………….!!

காதலுக்காக நட்பாகாதே
நட்பாகி காதல் கொள்……………………!!

யாரிடமும் கடிந்து
கொள்ளாதே
அன்பான பேச்சு
மிக பெரிய மாற்றத்தை
கொண்டு வரும்……………………..

அனைத்தையும் ரசி………
சின்ன சின்ன
விஷயத்தில் மகிழ்ச்சிக்கொள்………………
எதிர் பார்ப்பை குறைத்துக்கொள்…….
தினமும் இசையில்
கரைந்து போ...............

நீ மகிழ்ச்சியாக வாழ்ந்திட
யாரிடம் அனுமதி கேட்க வேண்டும்……
இப்போதே மகிழ்ந்திடு
வாழ்க்கை சிறியது,…………………………..

எழுதியவர் : அதார் உதார் விக்கி (6-Mar-17, 6:23 am)
பார்வை : 948

மேலே