வாசலை தாண்டிய காளைகள்
" கொள்கைகளற்ற அரசியலில்
கொள்கைகளுக்காக கூடிய கூட்டமடா !
இருள் சூழ்ந்த வேளையிலும்
கொள்கை சுடரால் ஒளிர்ந்தோமடா!
மதங்களை கடந்து மதமில்லா
யானைகளாய் வலம்வந்தோமடா!
அஃறிணை காளைக்காக களமாடி
உயர்திணை காளையாய் உயர்ந்தோமடா!
அரசியல் சாயத்தை வெளுத்து
விவ-சாயத்தை காத்தோமடா!
வாசலைவிட்டு வராதவரை
வாசலுக்காக வரவைத்தோமடா!
வாசலை துறந்தோமடா
வாடிவாசலை திறந்தோமடா!