ஜல்லிக்கட்டே எங்கள் மல்லுக்கட்டு

பாயும் காளையை
பாய்ந்து அடக்கும்
வீர தமிழன் நாங்கள்.
புறமுதுகை காட்டி ஓடும்
கோழை அல்ல நாங்கள்.
பண்டைய காலத்தில்
புலியை எதிர்த்து
போரிட்டவர்கள்
நாங்கள்.
புலிகுத்தி வீதி
என்று சேலத்தில் உண்டு
சென்று பாரீர்.
வீரக்காயம் பல கண்டோம்
களத்தில்.
பட்ட காயத்திற்கு மருந்து
கண்ணீயர் காட்டும்
கடைக்கான்னே.
மீண்டும் துள்ளிகுதிப்போம்
களத்தில்.
வென்றால் எங்கள்
தோள்கள் திமிரெடுக்கும்.
தோல்விக்கு இடமில்லை.
திமிரெடுத்த திமிலோடு
எங்கள் தமிழ் காளை
பேரெடுக்கும்.
மீட்டெடுத்தோம்
எங்கள் கலாச்சாரத்தை,
இனி
எப்போருக்கும்
பாய்ந்து வரும்
இந்த காளை.
பயம்யரியா
இளம்காளை.