காதலன் காதலி
காதலன் காதலி உரையாடல்.
காதலி தன் காதலனிடம் சில கேள்விகளை கேட்டுக்கொண்டு இருக்கிறாள்.
காதலன்: அடுத்த கேள்வி கேள்.
காதலி: என்னை உனக்கு எவ்ளோ புடிக்கும்?
காதலன்: ரொம்ப ரொம்ப புடிக்கும்.
காதலி: என் தோழிகளை புடிக்குமா?
காதலன்: வாய மூடு டி அவங்கள பத்தி பேசுனாலே எனக்கு புடிகல.
காதலி: என் பெற்றோர்களை பற்றி சொல்
காதலன்: அவர்கள் உனக்கு தெய்வம் போல்
காதலி: உன் பெற்றோர்கள் பற்றி சொல்
காதலன்: அவர்கள் எனக்கு தெய்வம் போல்
காதலி: உன் நண்பர்களை பற்றி சொல்லு
காதலன்: மானங்கெட்டவர்கள் அவர்கள்...
காதலி: என் உறவினர்களை பற்றி சொல்?
காதலன்: அடுத்த கேள்வி கேள்.
இப்பொழுது இதை கீழ் இருந்து மேல் படியுங்கள்.