வாழும் தெய்வம்
கண் முன்னே தோன்றும் தெய்வம் --அம்மா !
உயிர்களின் அறிமுக வார்த்தை --அம்மா !
குடும்பத்தின் குல விளக்கு--அம்மா !
உறவுகளின் விதி விலக்காய் --அம்மா !
மெழுகுவர்த்தியாய் உருகுவாள்--அம்மா !
குத்துவிளக்காய் ஜொலிப்பாள்--அம்மா !
ஆபத்து வேளையில் ஒலிக்கும் ஓசை --அம்மா !
அன்பின் மொத்த உருவம்--அம்மா !

