தந்தையின் உணர்வுகள்

எனது தாயின் மறுவடிவாய் பிறந்தாயே எனதன்பு மகளே....
நானும், உனது தாயும் செய்த தவத்தால் கிடைத்தாயே என் தங்கமே....
உனக்காகவே உழைத்து ஓடாய் தேய்ந்தேனே என் கற்பூரமே....

நீ ஆசைப்பட்டுக் கேட்டதெல்லாம் வாங்கித் தந்தேன்...
எனது மகள் நீ படித்து மேதையாக வேண்டுமென்று பள்ளியில் சேர்த்து,
நீ கால்களால் நடந்தால் உனது கால்கள் தான் நோகுமே என்றே எனது தோளில் சுமந்தே உன்னை பள்ளியில் விட்டுவிட்டு வந்தேனே தினமும்...
அப்போதெல்லாம் உனது மழலை மொழிகளால் எனது கவலையெல்லாம் தீர்ப்பாயே....
எனது செல்ல மகளே,
பள்ளி படிப்பை முடித்தே நீ உயர்படிப்பு செல்ல வேண்டுமென்றவுடன் வேண்டாமென்று மறுமொழி கூறாது உனது உயர்படிப்பிற்காகச் சொத்தை விற்று படிக்க வைத்தேனே எனது ஆருயிரே....
உயர்படிப்பை முடித்து வந்த நீ வேலைக்குச் செல்கிறேன் என்றாய்....
சரியென்று நானும் சம்மதித்தேன்.....
இந்தத் தந்தையின் சுமையை உனது தலைமீது ஏற்று குடும்பத்தைப் பொறுப்பாக வழிநடத்திய எனது அருமை மகளே,
திடீரென ஒருநாள் வேலைக்குச் சென்ற நீ திரும்பி வரவில்லை...
எல்லா இடங்களிலும் தேடினேன்....
உன்னைக் காணவில்லை....
நம் உற்றார், உறவினரெல்லாம் என்னைப் பார்த்து, என்னடா பிள்ளை வளர்த்து இருக்கிறாயென்றே தூற்ற,
கலங்கி தலைகுணிந்து நின்றேனே தவிர, உன் மீது நான் எந்தக் கோபமும் கொள்ளவில்லை எனதன்பு மகளே....
எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் அத்தனையும் பொறுத்துக் கொண்டு வாழ்ந்தேன் உன்னை என்றாவது காண்பேனென்ற நம்பிக்கையில்.....
நீ கேட்டால் எனது உயிரையே தந்திருப்பேன்....
அப்படிப்பட்ட நான் நீ விரும்பிய கணவனை மட்டும் உனக்கு மணம் முடிக்க மறுத்து இருப்பேனா???....
நானே உனக்கு மணமுடித்து சந்தோஷமாய் அனுப்பி வைத்திருக்க மாட்டேனா???....
உனது தகப்பன் என் மேல் நீ வைத்த நம்பிக்கை அவ்வளவு தானா???....

இப்போதாவது இந்த தந்தையைக் காண வந்தாயே....
அது போதுமம்மா....
எனது உயிர் பிரியும் நிம்மதியோடு இக்கூடுவிட்டு.....

( ஒரு தந்தை தன் மகளிடம் சொல்ல எண்ணிய தன் உணர்வுகளை தனது கண்ணீர்த்துளிகளில் சொல்லிவிட்டார். அதை வார்த்தைகளால் விவரிக்க எண்ணிய நான் உண்மையில் தோற்றுப் போனேன்....
உணர்வுகள் வார்த்தைகளுக்குள் அடங்குவதில்லை....
அவற்றை உணர மட்டுமே முடியும்.... )

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (13-Mar-17, 8:59 pm)
பார்வை : 936

மேலே