ஐந்தடி அழகே
நூரடி கவி உனை
ஈரடி கொள்ள,
பொய்யா மொழியன்
முயல தோற்பான்
நான்முக பிரம்மன்
முயன்றும் தோற்பான்..
ஐந்தடி சொச்ச
அவன்தன் முயற்சிக்கு
மெய்வருத்தகூலி, பாவை
உந்தன் பார்வையென்றால்
பேராயுள் நூறு சென்றும்
பிரம்மாயுள் பிழைக்குமன்றோ....
*(நூறு பேராயுள் = பிரம்மனின் ஆயுட்காலம் )
$வினோ...