பெருமாள் வினோத் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பெருமாள் வினோத்
இடம்:  வள்ளியூர்
பிறந்த தேதி :  18-Sep-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Feb-2012
பார்த்தவர்கள்:  2217
புள்ளி:  151

என்னைப் பற்றி...

என் பெயர் பெருமாள் வினோத் , தமிழ் தாகம் தீர கவி அருந்தும் சிறுவன்...................

என் படைப்புகள்
பெருமாள் வினோத் செய்திகள்
பெருமாள் வினோத் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2020 10:00 am

இன்று வரை பார்த்ததில்லை
இனியும் பார்ப்பதாய் இல்லை
இன்று வரை கேட்டேன்
இனியும் கேட்பதாய் தான் உத்தேசம்
ஊர் சடங்கு எல்லாம் ஊருக்கு தான்
கூவும் குயில் எங்கிருந்தால் என்ன
குயிலோசை என்றும் என்னுள்


# எஸ் பி பாலசுப்பிரமணியம்

மேலும்

பெருமாள் வினோத் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2020 9:57 am

நன்றாக உற்றுப் பார்
அது நீதான்

மேலும்

பெருமாள் வினோத் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2020 9:56 am

ஆழ்கடலின் மெளனமும்
கரைகடலின் ஆர்பரிப்புமாய்
நானும்
என் வாழ்வும்

மேலும்

பெருமாள் வினோத் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2020 9:55 am

இன்றுவரை புரியவில்லை
எனக்கும்
உங்களுக்குமான
இடைவெளி எல்லை

மேலும்

பெருமாள் வினோத் - பெருமாள் வினோத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Mar-2012 1:17 pm

இப்படைப்பு என் உயிர்தோழிக்காக.....

யார் அவள் ...
அதிகம் கருவில் சுமந்திடவில்லை
அமுதும் மார்பில் வழங்கிடவில்லை
தொப்புள் உறவு ஒன்றுமில்லை
அந்தோ ! அரிதெனும் அன்னையுமில்லை.......

ஓர் கருவில் பிறந்திடவோ
பிழைக்கு உறுபொருள் கேட்டிடவோ
கேட்டும் வீட்டில் கூற்றிடவோ
அன்னாள் என் தங்கை அன்று ......

கடற்கரை மணலில் கால்தடம் ஏது
கலகம் ஒன்றோ எங்களுள் ஏது
ஆளில்லா கொட்டகையில் விழித்தல் ஏது
மரிக்க வைக்க காதலன்று இது .....

யார்தான் அவள் .....


ஒற்ற வயதொற்ற அன்னையாய்
ஏற்ற உணர்வுற்ற தங்கையாய்
அகம் சிறிதற்ற காதலியாய்......

மூன்றும் முகர்ந்தேன் உந்தன் மூச்சில்
அன்பாய் அமைந்த எந

மேலும்

பெருமாள் வினோத் - பெருமாள் வினோத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Aug-2012 1:29 pm

இரண்டம் வருட கல்லூரி விடுமுறை.சென்னை.
டிவி,கடலை,நாவல்..நான்கு நாட்கள் ஓடிவிட்டது .
வெட்டியாக இருப்பதும் எளிதில்லை ,சினிமா வசனம் ஞாபகம் வந்தது .
"உன் சித்தப்பா வூடும் அங்க தான் இருக்கு , போறியால "
' ம்'
"மாமவ கொண்டு வுட சொல்லவா "
'நான் பார்த்துகிறேன் போன வை '

சித்தப்பாவிற்கு இரண்டு வயதில் மகள் இருப்பதாய் அம்மா சொன்ன ஞாபகம் ......... சனி ,ஞாயிறு இரண்டையும் அவளுடன் கழித்தாள் என்ன..

"அத்த நா குமார் சித்தப்பா வீட்டுக்கு போய்ட்டு வரேன் , மாமாட சொல்லிரு "
"போயிருவல்லா ,ஷேர் ஆட்டோல ot போயி ,அங்கிருந்து 62e ஏறி , குமார் நம்பர் இருக்குல "

"ம்ம் , சரி வரேன் "

ஆட்டோ ஸ்டாண்ட் .

மேலும்

பெருமாள் வினோத் - பெருமாள் வினோத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Sep-2017 9:49 am

கண்ணம்மா
உனை காண விழைகிறேன்

என்ன செய்து ஈர்த்தாயோ
அவன் நோக்கும் திசையெங்கும்
நின்முகம் கண்டிட...

என்ன மோகம் செய்தாயோ
தோலுரிக்க காத்திரா மன்மதனாய்
அவன்வேகம் கூடிட....

என்ன நோவு கொடுத்தாயோ
மார்பு துடித்தே அவன்
கருமேனி கொதித்திட....

என்ன மணம் கொண்டாயோ
நின்றன் வீசுகமழில் அவன்
விரியும் மலராகிட....

தமிழோடு கூடியவளே
உனை காண விழைகிறேன்
கலவி சிதறிய துளியால்
பெருங்காப்பியம்தனை மீட்டிட...


$வினோ

மேலும்

நன்றி 24-Oct-2017 6:55 am
ஒவ்வொரு பெண்ணும் ஒரு ஆணின் தனித்துவத்தில் சேர்ந்திருக்கிறாள் என்ற விதிகளின் நியதிகளை நினைக்கும் போது வாழ்க்கையின் விந்தையும் கொஞ்சம் தெளிவு பெறுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 27-Sep-2017 5:27 pm
பெருமாள் வினோத் - பெருமாள் வினோத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Apr-2017 8:58 am

விழிநீர் அது வழிதலின் போதும்
மனத்தின் வெம்மை ஏறுதலின் போதும்
இமைத்து உறங்கும் மடி கொண்ட
சகியாய் ஓர் உயிர் கேட்பேன்
சோகம் எனை விரட்டலின் போதும்
யான் துவள நினையும் நொடியின் போதும்
தழுவி கொள்ளும் தோள் கொண்ட
நட்பாய் ஓர் உயிர் கேட்பேன்
தனிமை தீ வாட்டலின் போதும்
தவறி வழி மாறுதலின் போதும்
விரல் பற்றி எனை கொள்ள
இறையாய் ஓர் உயிர் கேட்பேன்
கேட்ட உயிர் கிடைக்கும் மட்டும்
யான் களித்து மகிழ கதியில்லை
கேட்கும் உயிர் நீயே என்றால்
இனி காத்தல் போல் ஓர் பிழையில்லை


$வினோ....

மேலும்

நன்றி நண்பரே... 04-Apr-2017 3:57 pm
காத்திருத்தல் ஒரு சுகம் அதுவும் சில நேரம் வலியாகும். காத்திருப்பு பிழை அழகு கவி. வாழ்த்துக்கள் நண்பரே... துவழ, தழுவி! 04-Apr-2017 9:18 am
பெருமாள் வினோத் - பெருமாள் வினோத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Mar-2017 7:14 am

இவன் காக்கை எனும் நினைப்போ
ஓர் பருக்கு சோற்றை வணங்கிட..
இவன் மண்ஊரும் புழு எனும் நினைப்போ
விளையும் மண்ணின் கதிதனை கேட்டிட..
இவன் கருகிய முகிலென்னும் நினைப்போ
கதறி ஓர் நாள் கண்ணீர் விட்டிட..
இவன் வால் நீட்டும் நாயென்ற நினைப்போ
உப்பிட்டவனுக்காய் ஓர் நன்றி காட்டிட..
பல வள்ளலார் வாழ்வதாக நினைப்போ
வாடிய பயிர்தனை கண்டு வாடிட..
இவனுள் மனிதம் உள்ளதென்ற நினைப்போ
உழவனும் மனித இனமே என கொண்டிட..
உழவா ! மன்னித்து விடு இனி மறந்தும் விடு
நாளை விடியும் என்றதொரு நினைவை..
இவன் வருவான் உனக்காய் ஓர்நாள்
பசைகோந்து அது புசிக்கு ஆகா எனும்போது


$வினோ..

மேலும்

நன்றி அய்யா 02-Apr-2017 6:12 pm
நன்றாய் இருக்கிறது. எழுத்து பிழைகளை தவிர்த்து கொள்ளுங்களேன். 02-Apr-2017 12:46 pm
நன்றி அய்யா 30-Mar-2017 11:32 pm
அற்புதமான சிந்தனை... வாழ்த்துக்கள் 30-Mar-2017 10:57 pm
பெருமாள் வினோத் - பெருமாள் வினோத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Mar-2017 9:35 am

அதோ ஒர் வானம்
எமக்கும் அது நீலமாகவே தோன்றுகிறது
அசைந்தாடும் தென்றல்
எமையும் அது உரசி தொலைகிறது
ஆர்ப்பரிக்கும் ஆழிஅலை
அதுவும் வந்து அலச தான் செய்கிறது
கதிர் உமிழும் ஒளியவன்
அவனும் கூட சுட வியக்கிறேன்
நிழலை நம்பி திரும்பி பார்த்தேன்
ஏனோ எனக்கும் அது கருமையே
தோட்டத்து மலரை கிள்ள செய்தேன்
அடடா! என் விரலிலும் வந்தேறியது
நம்பிக்கை மட்டும் வரவேயில்லை
கரம் தனை கீறி பார்த்தேன்
என் குருதியும் சிகப்பு தான்...
பகுத்தறிவு கொண்ட மாந்தர் உரைக்கிறான்
திருநங்கை வேற்றுமையின் பால் என்று
அறிவு கெட்ட அஃறினை பிதற்றுகிறது
நீயும் கூட உயர்தினை என்று....
ஓ ! அதனால் தான் அவை அஃறினையோ...

மேலும்

நன்றி தோழமையே 24-Mar-2017 6:51 am
பிரிவுகளின் வீதியில் அலசல்கள் யதார்த்தமானது ஆனாலும் அவைகளின் தன்மைகள் விலாசமானது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Mar-2017 12:05 am
பெருமாள் வினோத் - பெருமாள் வினோத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Mar-2017 2:08 pm

இன்ஸ்பெக்டராக பதவியேற்ற அரவிந்தனுக்கு முதல் வழக்கு. சென்ற வாரம் சிறந்த கவிதைக்கான தேசிய விருது பெற்ற கவிஞர் இன்று கொலை செய்ய பட்டுள்ளார்.
அரவிந்தன்: தீனா...அவர் வயித்துல குத்திருக்க வாள், அந்த அவார்டு வாள் தான....?கைரேகை நிபுணர்கள் வரலயா....என்னயா சொல்லுது உன் ஆறாவது அறிவு..
தீனா: அமீர் தான் சார் சந்தேகமே இல்ல ....பக்கத்துல கிடந்த பேப்பர்ல "அமீர் என்னை கொலை பண்ண...." அப்டீனு ஏதோ எழுதிருக்காரு...
அரவிந்தன்: வேற ?
தீனா:சத்தம் வெளிய கேட்க கூடாதுனு TV Volume அதிகமா வைச்சிருக்கான்..
அரவிந்தன்: கவிஞர் சுபாவம் எப்டி..?
தீனா: நல்ல மனுசன் சார்...இங்க பாருங்க 2 பேருக்கு coffee போட்டுருக்காரு..

மேலும்

பெருமாள் வினோத் - பெருமாள் வினோத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Mar-2017 8:45 am

கவிதேன் நிலா
இசைபனி தென்றல்
இன்னும் தோன்றா பலவும்
உவமானம் கொண்டு
தன்மானம் காக்கும்
பெண்மை என்ற ஒற்றை சொல்லில்..

உனக்கென எந்தன் வாழ்த்துகள்


$வினோ..

மேலும்

மகளிர் தின வாழ்த்துக்கள் 08-Mar-2017 8:50 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

நந்து தமிழன்

நந்து தமிழன்

தொப்பையாங்குளம்

இவர் பின்தொடர்பவர்கள் (3)

நந்து தமிழன்

நந்து தமிழன்

தொப்பையாங்குளம்

இவரை பின்தொடர்பவர்கள் (4)

நந்து தமிழன்

நந்து தமிழன்

தொப்பையாங்குளம்
ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

ர~ஸ்ரீராம் ரவிக்குமார்

தமிழ்நாடு (திண்டிவனம்)
மேலே