அன்பின் விலை 249

இரண்டம் வருட கல்லூரி விடுமுறை.சென்னை.
டிவி,கடலை,நாவல்..நான்கு நாட்கள் ஓடிவிட்டது .
வெட்டியாக இருப்பதும் எளிதில்லை ,சினிமா வசனம் ஞாபகம் வந்தது .
"உன் சித்தப்பா வூடும் அங்க தான் இருக்கு , போறியால "
' ம்'
"மாமவ கொண்டு வுட சொல்லவா "
'நான் பார்த்துகிறேன் போன வை '

சித்தப்பாவிற்கு இரண்டு வயதில் மகள் இருப்பதாய் அம்மா சொன்ன ஞாபகம் ......... சனி ,ஞாயிறு இரண்டையும் அவளுடன் கழித்தாள் என்ன..

"அத்த நா குமார் சித்தப்பா வீட்டுக்கு போய்ட்டு வரேன் , மாமாட சொல்லிரு "
"போயிருவல்லா ,ஷேர் ஆட்டோல ot போயி ,அங்கிருந்து 62e ஏறி , குமார் நம்பர் இருக்குல "

"ம்ம் , சரி வரேன் "

ஆட்டோ ஸ்டாண்ட் .
நான் ஏறிய ஆட்டோவில் அவளும் ஏறுகிறாள் .
19 ,20 இருக்கலாம் .கருப்பு சல்வார் .வெள்ளை பளிங்காக இருந்தாள்.உதடு செக்க செவேலென .
நீல் வட்டத்தில் அம்சமாய் முகம் .

சற்று கீழே நோக்கினேன்.....

ச்சி என்ன மனுசன்டா நீ .சாரிடா சிந்து .

( (நான் யாரைவது சைட் அடிப்பேன்னு நென்ய்க்கியா சிந்து -சைட் அடிப்ப பட் தப்பா பார்க்க மாட்டனு தெரியும் ஏன்னா நீ என் வினோ ))

சிந்துவ பற்றி கூற வேண்டும் .என்னுயிர் காதலி. .

நா இப்ப அந்த 2 வயது குட்டிய பார்க்க போறதே

அவள சிந்துவா நென்ய்ச்சு கொஞ்சத்தான் .

சிந்துக்கு கிப்ட் கொடுத்து ரொம்ப நாள் ஆச்சு .

ot ல எதாவது வாங்கி அந்த குட்டிக்கு கொடுக்கணும் .

சிங்கப்பூர் ஷாப்பிங் . டீர்ட்டி பியர் - 249 ரூபாய்

."அப்படியே அந்த 10 ரூபாய்க்கு ஒரு சாக்லேட் ஒன்னும் கொடுங்கனா "

62E .
எதிரே மீண்டும் கருப்பு சல்வார் .
இந்த முறை 21 முதல் 25 இருக்கலாம் . திருமணம் ஆகிருக்காது .

அக்கா வயதுதான் .
அதனாலென்ன பார்க்க கூடாதா ? அழகாய் இருந்தாள்.

மீண்டும் சிந்து நெனய்வில்.

கண்ணை மூடி கொண்டு பாட்டில் மூழ்கினேன் .


பஸ் ஸ்டாண்ட் .
கருப்பு சல்வாரை காணூம் .

சித்தப்பா காத்திருந்தார் .
இரண்டு நிமிடத்தில் வீடு.
அந்த குட்டியின் பேர் லக்ஷயா வாம் .

லக்ஷயா உடான அனுபவங்களை சிந்துவிடம் கூற வேண்டும் இந்த ஞாயிறில் .


லக்ஷயா ஸ்ரீ .

அந்த நாள் எனக்கு சாதாரணமான நாள் அன்று .

'''இது யாரும்மா ''','''சித்தப்பாவா ''''

அந்த சின்னஞ்சிறு கையில் அழுத்தமாக தவழ்ந்தது 249 மட்டுமல்ல என் இதயமுந்தான் .

'''நீ போகும் போதுபொம்மைய கொண்டு போக கூடாது சரியா ''''

அந்த 10 ரூபாயின் மதிப்பு எனக்கு அதிகமாய் பட்டது .

'''இந்தா இத பிரிச்சு தா
எனக்கு போதும் நீ சாப்பிடு '''

'''நா இங்கே இருக்கேன் , கால மடக்கி உட்காரு,, ஓகே இந்தா பிடி ''''

அங்குமிங்கும் பறந்த 249 அழுக்கானது .

சித்தப்பாவிற்கு குருவாயுரப்பா சொல்லி கொடு லக்ஷுமா,

'''குருவாயுரப்பா , குருவாயுரப்பா ஆட்டோவில் ஏறி வந்து நீ தானே சாட்சி ''''

அதுவரை தாத்தாவின் பழய புத்தகத்தில் அனுபவித்த இறைவனை நேரில் கண்டேன் .

'''நா சித்தப்பா கிட்ட படுக்கிறேம்மா '''
'''ஏன் நிறுத்துற ,நிறுத்தாத தட்டு '''

இந்த நொடி இப்படியே நிற்காதா !

'''என்ன பார்த்துகிட்டே இருக்க ! நா தூங்கிட்டேன்
நீயும் தூங்கு சித்தப்பா '''

என்னவொரு தரிசனம் என் கவி உறங்குகிறது
249 ஐ பற்றியவாறு .

'''நா ஸ்கூல்க்கு போய்ட்டு வந்துடுறேன் ''''

'''நீ போககூடாது சரியா '''

'''அம்மா சித்தப்பா வீட்லயே இருக்கட்டும் ஓகே யா '''

என் உயிர் ரதம் அதனை ஏந்தியவாறு தொலைவில் ........
ஜன்னலோர விழி எனை நோக்கியவாறு .

நான் கிளம்பிய மதியம் லக்ஷயா என்னை தேடியதாக சித்தி சொன்ன ஞாபகம் .

அந்த 249 என் நினய்வை அவளுக்கு எடுத்து காட்டட்டும்,
என்று எண்ணியவாறே மொபைலை தேடினேன் .




1 மெசேஜ் , 4 மிஸ்ட் கால் சிந்துவிடமிருந்து ........

எழுதியவர் : வினோ.......... (20-Aug-12, 1:29 pm)
பார்வை : 367

மேலே