இனியும் காத்தல் பிழை
விழிநீர் அது வழிதலின் போதும்
மனத்தின் வெம்மை ஏறுதலின் போதும்
இமைத்து உறங்கும் மடி கொண்ட
சகியாய் ஓர் உயிர் கேட்பேன்
சோகம் எனை விரட்டலின் போதும்
யான் துவள நினையும் நொடியின் போதும்
தழுவி கொள்ளும் தோள் கொண்ட
நட்பாய் ஓர் உயிர் கேட்பேன்
தனிமை தீ வாட்டலின் போதும்
தவறி வழி மாறுதலின் போதும்
விரல் பற்றி எனை கொள்ள
இறையாய் ஓர் உயிர் கேட்பேன்
கேட்ட உயிர் கிடைக்கும் மட்டும்
யான் களித்து மகிழ கதியில்லை
கேட்கும் உயிர் நீயே என்றால்
இனி காத்தல் போல் ஓர் பிழையில்லை
$வினோ....