உன்னை போல் இன்னொருத்தி
உன்னை போல் இன்னொருத்தி
இல்லை என்ற கர்வத்தில் நீ
அப்படி ஒரு அழகியை கண்டு பிடித்த
ஆனந்தத்தில் நான்
அதே அழகு
அதே பார்வை
அதே வெட்கம்
அதே கோபம்
அதே புன்னகை
இப்படி
அனைத்திலும் உன்னைபோல்
எனக்கான இரண்டாம் காதலி
அவள்தான் என்ற ஆசையுடன்
நான்
நீ சாதரணமாய் சேலையுடுத்தினாலும்
மடிசாரில் அவள்
இப்படி ஒரு சில மாற்றங்களேயன்றி
அச்சு அசலாய்
நீயாய் அவள்
ஒரே நேரத்தில்
இரண்டு காதலிகள்
சக்காளத்தி சண்டை இல்லாமல்
நீ ஒருவள் மட்டுமே
அழகால் அட்டூழியம் நடத்தி
அடிக்கடி என்னை வதைப்பது
போதாதென்று
அவ்வ பொழுது
அவளையும் கூட்டி வந்து
கொன்று போடுகிறாய் என்னை
இனியேனும் இருவரும்
ஒரே நேரத்தில்
பேரழகால் வாட்டாதீர்கள்
பாவம் நான்
உன் அழகில் அடிபட்டு
துடிக்கும் வேளையில்
அவள் வேறு அடிக்கடி
கண்ணாடி வழியே
கண்டபடி உசுப்பேத்துகிறாள்
உன் பிம்பமாய்
எப்பொழுதும் போல
ஏக்கத்தோடு நான்
எதுவும் தெரியாதது போல்
அதே அழகென்ற கர்வத்தில்
நீ . . . . . . . .