ஆதலால் அஃறினை

அதோ ஒர் வானம்
எமக்கும் அது நீலமாகவே தோன்றுகிறது
அசைந்தாடும் தென்றல்
எமையும் அது உரசி தொலைகிறது
ஆர்ப்பரிக்கும் ஆழிஅலை
அதுவும் வந்து அலச தான் செய்கிறது
கதிர் உமிழும் ஒளியவன்
அவனும் கூட சுட வியக்கிறேன்
நிழலை நம்பி திரும்பி பார்த்தேன்
ஏனோ எனக்கும் அது கருமையே
தோட்டத்து மலரை கிள்ள செய்தேன்
அடடா! என் விரலிலும் வந்தேறியது
நம்பிக்கை மட்டும் வரவேயில்லை
கரம் தனை கீறி பார்த்தேன்
என் குருதியும் சிகப்பு தான்...
பகுத்தறிவு கொண்ட மாந்தர் உரைக்கிறான்
திருநங்கை வேற்றுமையின் பால் என்று
அறிவு கெட்ட அஃறினை பிதற்றுகிறது
நீயும் கூட உயர்தினை என்று....
ஓ ! அதனால் தான் அவை அஃறினையோ...


$வினோ...

எழுதியவர் : வினோ.... (23-Mar-17, 9:35 am)
பார்வை : 135

மேலே