கண்ணம்மா உனை காண விழைகிறேன்
கண்ணம்மா
உனை காண விழைகிறேன்
என்ன செய்து ஈர்த்தாயோ
அவன் நோக்கும் திசையெங்கும்
நின்முகம் கண்டிட...
என்ன மோகம் செய்தாயோ
தோலுரிக்க காத்திரா மன்மதனாய்
அவன்வேகம் கூடிட....
என்ன நோவு கொடுத்தாயோ
மார்பு துடித்தே அவன்
கருமேனி கொதித்திட....
என்ன மணம் கொண்டாயோ
நின்றன் வீசுகமழில் அவன்
விரியும் மலராகிட....
தமிழோடு கூடியவளே
உனை காண விழைகிறேன்
கலவி சிதறிய துளியால்
பெருங்காப்பியம்தனை மீட்டிட...
$வினோ