மின்னலே நீ வரும் நேரம் தென்றல் என் மனதேறும் --- புதுக்கவிதை
மின்னலே நீ வரும் நேரம்
தென்றல் என் மனதேறும்.
என்னுள்ளே நீ வந்தாய்
ஏதேதோ சொன்னாய் !
வண்ணக் கனவுகளில் நின்றிடவும்
வளர்பிறையாய்ச் சிரித்தாய் !
மன்னவனே என்றாய் !
மனசெல்லாம் நிறைந்தாய் ! ( 21 )
கண்களினால் சுமந்தேனே
காதல் கடிதத்தை .
எண்ணமெல்லாம் நீயாகி
எத்திக்கும் நிற்கின்றாய் !
பெண்களிலே சிறந்தவளே !
என்னிதயம் தொட்டவளே !!! ( 33 )
நிலையில்லா உலகினிலே
நிலைத்திடுமா என் காதல் .
சிலை போல இருப்பவளே !
சிதைக்கின்றாய் நெஞ்சத்தை !
பாராமல் பார்க்கின்றாய் !
பாதகத்தி நீயுந்தான் !!!! ( 47 )
சேராயோ என்னோடு
சேர்ந்து விடு விரைவாக !
சீரான செவ்விதழால் சித்திரமே
முத்தம் கொடு ! வனக்குயிலே
வாராயோ என்னருகில்
வரமாகி நில்லாயோ ! ( 62 )
மின்னுகின்ற கண்ணாலே
ஈர்க்கின்றாய் விசையுடனே என்னை .
புவிதனிலே கால் பாவாது
மிதக்கின்றேன் தென்றலாக .... !!!! ( 72 )
ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்