வஞ்சகர்கள்
அகிலம் படைத்தவனே !
அற்புதம் செய்தவனே !
எல்லாம் தந்தவனே !
ஏன் படைத்தாய்
அந்த துரோகிகளை......
ஏன் படைத்தாய்
அந்த வஞ்சகர்களை.......
உயிரில் கலந்த
சிசுவை வேறோடு
பிடுங்கி எறியவா !
மழலை நீங்கா
பிஞ்சு மலரை
கசக்கி எறியவா !
ஏன் படைத்தாய்
இந்த வஞ்சகர்களை........
ஏதும் அறியா
பேதைகள் மண்ணோடு !
எல்லாம் செய்த
இழுதைகள் உயிரோடு !
ஆதங்கத்துடன்
புகழ்விழி.......