விவசாயிகளின் வேதனை

அனைவருக்குமான உணவு
படியளக்கும் கடவுள்கள்
டெல்லியில் உண்ணாவிரதம்
வாழ்க்கை பிச்சை கேட்டு
இடைதேர்தலில் மூழ்கும்
கட்சிகள்
ஆர் கே நகரில்
வாக்கு பிச்சை கேட்டு
நமக்கான அரசு
உரிமைகளை கேட்டு பெற
வக்கற்று
வெறும் தீர்ப்புகளை மட்டுமே
அடிக்கடி வெளியிடும்
உச்ச நீதீ மன்றம்
காவிரியை பெற்றுதர
துப்பற்று
மூன்று வேலை
மறக்காமல் பசியாரும்
அனைவரும்
நன்றியற்று
ஆண்டாண்டுகளாய்
உணவு பிரசவித்த
நஞ்சை புஞ்சை எல்லாம்
மலடுற்று
நிலத்தடி நீரெல்லாம்
லாரிகள் பயணம்
மணல் குவாரி வழியே
திருடபட்டு
எல்லாம் தெரிந்தும்
எதிர்க்க முடியாமல்
தவிக்கிறோம்
வாக்கு வழியே வக்கற்றவர்க்கெல்லாம்
ஆட்சி கொடுத்துவிட்டு
முடிவில்லாமலே
தொடர்கதையாகிறது
விவசாயிகளின் தற்கொலை
நாதியற்று
ஒவ்வொரு பருக்கை உணவிற்கும்
நினைத்து கொள்ளுங்கள்
விதைப்பவரெல்லாம்
மாண்டு உறமாகி போனால்
அந்த பாவமும்
நம் கணக்கில் சேருமென்பதை
ந.சத்யா