உதயம் காணா இதயம் --- புதுக்கவிதை

உதயம் காணா இதயமிது !
உறங்க நினைத்தேன் !
உறங்க முடியவில்லை !
இமைகள் மூடினாலும்
இதயம் விழித்துக் கொள்கிறது !
விடிந்தும் உறங்குகின்றேன்
தனிமையில் தவிக்கின்றேன் !
உதயத்தைத் தேடித் திரிகிறேன் !!


என்னுள்ளே நீ வந்தாய்
ஏதேதோ சொன்னாய் !
வண்ணக் கனவுகளில் நின்றிடவும்
வளர்பிறையாய்ச் சிரித்தாய் !
மன்னவனே என்றாய் !
மனசெல்லாம் நிறைந்தாய் !


கண்களினால் சுமந்தேனே
காதல்கடிதத்தை
எண்ணமெல்லாம் நீயாகி
எத்திக்கும் நிற்கின்றாய் !
பெண்களிலே சிறந்தவளே !
என்னிதயம் தொட்டவளே !!!


நிலையில்லா உலகினிலே
நிலைத்திடுமா என்காதல் .
சிலைபோல இருப்பவளே !
சிதைக்கின்றாய் நெஞ்சத்தை !
பாராமல் பார்க்கின்றாய் !
பாதகத்தி நீயுந்தான் !!!!


சேராயோ என்னோடு
சேர்ந்துவிடு விரைவாக !
சீரான செவ்விதழால் சித்திரமே
முத்தம்கொடு ! வனக்குயிலே
வாராயோ என்னருகில்
வரமாகி நில்லாயோ !
உதயம் காண்போமே
இதயத்தைத் தந்துவிடு என்னிடமே !!!!


ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (27-Mar-17, 9:25 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 107

மேலே