தொடக்கம்
கருவறையில் இணைந்து
பிரசவறையில் பிறந்து
அன்பறையில் அன்னையோடும்
ஆதரவு அறையில் தந்தையோடும் ,பயணித்து
வகுப்பறையில் வல்லவனாய் திகழ்ந்து
பட்டறையில் பல வித ஆக்கங்களால் உறைந்து
பரந்த உலகில் ,
பறந்து செல்ல ,
துடிக்கும்
இவளுக்கு
தொடக்கம் ஒரு
கவிதையின் கருவாக தெரிகிறது ....
இந்த இரண்டு நாட்களில்
ஒரு சில பக்கங்கள்
பிடித்த புத்தகத்தில் உள்ள
புரியாத வார்த்தைகளாக
மாறினாலும்
என் மனம்
தூண்டிலில் இறை வைத்து மீன்களை
தேடும் வேடனாக மாறிவிட்டது......!!