அழகான கடற்கரையிலே ஒரு ஆழமான கேள்வி

அழகான கடற்கரையிலே ஒரு ஆழமான கேள்வி

"மாலை நேர கதிரவன் மேக கீற்றினுள்
நுழையும் நேரம் !.. வயது
வரம்பின்றி மானிடர் கூட்டம் அலை மோதுகிறது
அங்கே.... சீரும் அலையின் ஓதம்
நித்தம் அவை மண் மீது கொண்டுள்ள மோகம்!.
இக்காட்சி திரையினிலே நான்
என்னை மறக்கிறேன் ...
அந்த அழகான கடற்கரையிலே எனது
கேள்வி மிக ஆழமானது!......... அதோ
மாடி வீட்டு இளையராணி கோடி புரண்ட
காரிலிருந்து கீழிறங்கி அன்னை
தந்தையின் ஆட்க்காட்டி விரலை ஆலமர
விழுதாக்கி சின்னதொரு ஊஞ்சல்
ஆடியபடி கடற்கரை நோக்கி வருகிறாள்!....
ஒ அவள் அணிந்த தலைபாகையின்
விலையோ என் மூன்று நாள் ஊதியம்,
அத்தருணத்தில் நான் கண்டேன்
பிறை நிலவின் உதயம்!........
அழகான கன்னத்தில் ஒரு கரு 'மை'
பொட்டு :- அது தான் மின்னல் வெட்டு
வெளிர் நிற உடையில் அந்த ஆறரை வயது
மழலை ஒரு தேவதை!..

" சிரிக்கிறாள் - வரையறுக்க முடியாத புன்னகை....
"கொஞ்சு தமிழ் பேசுகிறாள் - இலக்கணம் சொல்லி
தராத பெயர் சொல்
"சுற்றி பார்க்கிறாள் - முன்னுரை கொண்டு
வரையறுக்க முடியாத எழில் ஓவியம்...... இக்காட்சியை காண்கையில் நினைவுக்கு
வருகிறது.....
"மழலை சிரிப்பின் மகத்துவம்
மருத்துவம் கண்டறியாத வைத்தியமென்று"!.....
" சற்று தொலைவிலே சிதறிய சில்லறை
சத்தம்!.. அருகே சென்று பார்த்தேன்
கண்ணிலா அன்னை பித்தளை தட்டேந்தி
நிற்கிறாள்!.. தந்தையோ பாவம்,
விடாபடியாய் சாட்டையடி, தடித்து விட்டது
சட்டையில்லாத மேனி!....
"அட சற்றே உயர்ந்தேன் நான் அதிர்ந்தேன்
ஒற்றை ஜடையிட்டு ஆறு வயது
குழந்தை பத்தடி கயிற்றின் மேலே நடை
பழகுகிறாள்... பச்சை புண் அவள் நெற்றியிலே!. ஆனால் அச்சமில்லாமல் வித்தை
காட்டுகிறாள் கயிற்றின் மேலே!!!.....

" கரணம் அடிக்கிறாள் - இரவு நேர ஊளிக்கு
இறைவன் தந்த ஊழி இது !!!.....
" பேசுகிறாள் - பே பே .... ஜாடை மொழியிலே
பசியின் பிரதிபலிப்பு !!!..
" சுற்றி பார்க்கிறாள் - அரை வயிறு போக
இன்றாவது நெற்றி புண்ணிற்கு
மருந்திட வழி கிடைக்குமாயென்று ????

இத்திரையிலே முதல் காட்சி என்
நெஞ்சத்தில் மகிழ்ச்சி !..
பிற்பாதி கட்சியோ என் ஈர விழி நனைந்து
உள்ளத்தில் நெகிழ்ச்சி !..
என்ன வாழ்க்கை இது பணம் உடையவன்
வாழ தகுந்தவன் நித்தம் வாழ்ந்து
கொண்டே இருக்கிறான்!!!..
ஏழ்மை கொண்டவன் அன்றாட காட்சியில்
வயற்றை கழுவிக்கொண்டே
நாட்களை கழிக்கிறான்!!!!...
"ஆனால் இந்த ஏழ்மை பிறப்பில் பிறந்த
மழலையின் எதிர்காலம்? உதிர்ந்த மலர்கள்
தேடும் வசந்தகாலமோ !!!!......
என்றும் அன்புடன்
இயந்திரவியல் துறை
விரிவுரையாளர்
ப. தாமோதரன்

எழுதியவர் : dam (15-Jul-11, 12:43 pm)
பார்வை : 397

மேலே