உண்மையான உள்ளம்

இதயத்தின்
தேடல்கள்
உணர்ச்சிக்கு தெரியாது
உயிர் இருக்கும் வரை.....!

முகம்
பார்த்து
பழகிய உருவம்
நிஜம் அற்று
போனது
மரணத்தினால்...!!!

தேடுகின்ற
நட்பு உண்மையானது
உதவிக்கரம் எது
என்று கண்டதாலே....!!!

கவலை
மறந்த
நிலை
மகிழ்ச்சியின்
எல்லை சிரிப்பு
மனிதனின் சொத்து....!!!

அன்பின்
எல்லை
பிறர் உதவியின்
உச்சம் - உண்மையான
உள்ளம்....!!

எழுதியவர் : லத்தீப் (29-Apr-17, 3:14 pm)
சேர்த்தது : நாகூர் லெத்தீப்
பார்வை : 245

மேலே