ஏதுமற்றவள்

பார்க்க விழி இருந்தும் ,
விழி பார்க்க நீயில்லை..........
பேச மொழி இருந்தும் ,
மொழி பேச நீயில்லை..........
தீண்ட விரல் இருந்தும் ,
விரல் தீண்ட நீயில்லை..........
பகிர வார்த்தை இருந்தும் ,
வார்த்தை பகிர நீயில்லை..........
அணைக்கக் கரம் இருந்தும் ,
கரம் அணைக்க நீயில்லை..........
சுவைக்க இதழ் இருந்தும் ,
இதழ் சுவைக்க நீயில்லை..........
துடைக்க கண்ணீர் இருந்தும் ,
கண்ணீர் துடைக்க நீயில்லை..........
காதலிக்க நான் இருந்தும் ,
நான் காதலிக்க நீயில்லை..........
அனைத்தும் இருக்கிறது,
உன்னைத் தவிர .......
அதனால் நான் ஏதுமற்றவள் ...................