காதல் ஆரூடம்

உன்
இதழ் சுளித்து சுழற்றினாய்
காதல் கசை -
சூடு பிடித்தது என்
சுக்ர தசை ...

உன்
கண் திறந்து வீசினாய்
காதல் பார்வை -
காலம் சொடுக்கியது என்
குரு பார்வை ...

உன்
பருவக் காட்டில் பரிசளித்தாய்
காதல் கனி -
அன்றே அடங்கியது என்
கண்ட சனி ...

கண்ணே !
காலமெல்லாம் எனை
காதல் செய் இனி ....

எழுதியவர் : சரவணக்குமார்.சு (6-May-17, 5:25 pm)
Tanglish : kaadhal Aaroodam
பார்வை : 73

மேலே