தன்னம்பிக்கையின் தத்துபிள்ளை தங்கவேலு மாரியப்பன்

#தன்னம்பிக்கையின் தத்துபிள்ளை .....
......#தங்கவேலு மாரியப்பனுக்காக.....#என் கவிதை ....

#ஆனி தொன்னுற்றைந்தில் தோன்றி
தமிழகத்தின் புகழை....
#ஆவனியில் உயர்த்திய
தமிழகத்தின் அதிசய நாயகனே .....

#கிராமமாம் பெரிய வடகம் பட்டியில்
தாய் சரோஜாவின் மகனாய் ..
#கஷ்டபடும் குடும்பத்தில்
தோன்றிய மாபெரும் சரித்திரமே ....

#கடவுள் உன்னை சாதனையாளனாக
மாற்ற எண்ணி - உன்
#கால் கட்டைவிரலை தவிர
மற்ற அனைத்தையும் பறித்துக்கொள்ள ..

#சகமனிதனாக இல்லையே என்ற குறை
உன் மனதில் எழாமல் - இருக்க ..
#சாதிக்கும் எண்ணத்தை விளையாட்டின் மீது
திருப்பிய பெருமை அவனையே சாரும் ...

#சக மாணவர்களிடம் கூட
இனைந்து விளையாட முடியாமல்....
#சாதிப்பதற்காகவே காத்திருந்த நீ..
இன்று சாதனையாளனாக. .....

#உடற்கல்வி ஆசிரியரின்
ஊக்கத்தாலும் ஆக்கத்தாலும் ..
#உன் உயிருக்கு நிகராய் மதித்த
உயரம் தாண்டுதலில் சாதிக்க நினைக்க..

#உன் முதல் தாண்டுதலாம்
பதினாளாம் வயதில்
#உயர தாண்டிய நீ அன்று ..
இரண்டாம் இடம் பிடிக்க ..

#கடவுச்சீட்டு காரணமாக
லண்டன் ஒலிம்பிக் - பதக்க
#கனவு கானல் நீராக.....
லட்சியம் கொண்ட மனிதனாய் ...

#இன்று ரியோடிஜெனிரோவில்
உலகம் உன்னை உற்றுநோக்க -தமிழர்கள்
#இன்பத்தில் திகைக்க ..நீ
உயரம்தாண்டுதலில் பெற்றாய் தங்கத்தை

#தமிழர்கள் யாருக்கும்
கிடைக்காத அரிய வாய்ப்பான
#தாய் நாட்டு கொடி ஏந்தும் வாய்ப்பு
கிடைத்தது உனக்கு - அன்று

#இந்தியர்கள் யாரும்
உயரம் தாண்டுதலில்
#இதுவரை பதக்கம் வெல்லவில்லை என்ற தாகத்தை ....
உன் தாண்டுதல் மூலம் தீர்க்க ..

#உன்னை மாற்றுதிறனாளி என கூறாமல்
தமிழகத்தின் பெருமையை
#உயர்த்தி ..மாற்றம் கொண்டு வந்த
திறனாளி என்றே கூறுவேன் ...

தன்னம்பிக்கை என்னும்
தாரக மந்திரத்தை
தன்னுள் கொண்டு
தனக்கு நிகர் தானே என்று ....
..
மேலும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்தியும் ......

சோதனைகள் பல கண்டு
சாதித்த உன்னை பற்றி
ஒரே வரியில் கூற வேண்டும் என்றால்

#தன்னம்பிக்கையின் தத்துபிள்ளை
#தங்கவேலு மாரியப்பன் என்றே
கூறுவேன் ......

எழுதியவர் : சுப.ஆனந்தன் (16-May-17, 11:13 am)
சேர்த்தது : சுபஆனந்தன்
பார்வை : 868

மேலே