தொலைவில் இல்லை நீ தொடப்போகும் வானம்

தோழனே !
துயில் எழு !

நினைப்பைவிட்டு
நிஜத்தில் வாழு!
வெற்றியை தொட்டு
நிலத்தில் வீழு !

பொறுப்பின் சுமைகளை
புஜத்தில் தூக்கு !
புகழின் மமதையை
புறத்தில் போடு !

கண்கள் விழித்து
கடமையை ஆற்று !
எண்ணம் திருத்தி
வண்ணம் ஏற்று !

வியர்வை துளிக்கு
விளக்கம் கேளு !
விடியல் மிளிர
முழக்கம் பாடு !

உதிரம் சொட்டி
உழைப்பை இடு !
களைப்பை கழட்டி
காவியம் தொடு !

தோழனே !
துயில் எழு !
தொலைவில் இல்லை
நீ தொடப்போகும் வானம் ...

எழுதியவர் : சரவணக்குமார்.சு (14-May-17, 6:17 am)
சேர்த்தது : சரவணக்குமார் சு
பார்வை : 443

மேலே