விடியல்கள் காத்திருக்கின்றன
விடிவது முதல்
ஒவ்வொரு நாளும்
முடிவது வரை
நம்மால்
முடிவது முடிந்தவரை
முயற்சித்தால்
நாம் எண்ணியபடி
படிவது படியும்.
படியாதவைகட்க்கு
நம் முயற்சிக்கால்கள்
ஏற
பல படிகளாய்
நாளைய
விடியல்கள்
நமக்காக காத்திருக்கின்றன !